ஓமைகாட்! ஸ்ரீசாந்துக்காக கையை அறுத்துக் கொண்ட பிக் பாஸ் ரசிகர்கள்
மும்பை: தான் பிக் பாஸ் 12 நிகழ்ச்சியில் வெற்றி பெறாத விரக்தியில் சிலர் தங்களின் கையை அறுத்துக் கொண்டதாக ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டார். அவரை பிக் பாஸ் வீட்டில் தங்க வைத்தால் சர்ச்சைகளுக்கு குறைவே இருக்காது என்று தெரிந்து தான் வரவழைத்தனர்.
பிக் பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஸ்ரீசாந்துக்கு தான் அதிக சம்பளம் என்று தகவல் வெளியாகியது.

ஸ்ரீசாந்த்
பிக் பாஸ் 12 நிகழ்ச்சியில் தொலைக்காட்சி நடிகை தீபிகா காகர் இப்ராஹிம் வெற்றி பெற்றார். ஸ்ரீசாந்த் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படி நடந்துவிட்டது. இதனால் ஸ்ரீசாந்த் ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தொலைக்காட்சி சேனல் மீது கடுப்பில் உள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாரபட்சமாக நடந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள்.

ரசிகர்கள்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்துள்ள ஸ்ரீசாந்த் பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, நான் வெற்றி பெறாததால் பலர் அதிருப்தி அடைந்துள்ளதாக கேள்விப்பட்டேன். பலர் அழுதுள்ளனர், சிலர் கையை அறுத்துக் கொண்டுள்ளனர். எனக்காகவோ, டைட்டிலுக்காகவோ யாரும் கையை அறுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

பிக் பாஸ்
எனக்காக கையை அறுத்துக் கொள்வது சரி அல்ல. அந்த கையால் நிறைய காரியம் செய்ய வேண்டி உள்ளது. நான் தான் நிஜத்தில் வின்னர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிக் பாஸில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் நான் தான் வின்னர். ஒரு அனுபவத்திற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.

பாசம்
என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த ஸ்ரீகுடும்பத்திற்கு நன்றி. பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடிக்க வேண்டும் என்று நினைத்து சென்ற நான் அதை ஆண்டேன். தீபிகா பிக் பாஸ் டைட்டிலை வென்றதில் மகிழ்ச்சி என்று ஸ்ரீசாந்த் கூறினார்.


Click it and Unblock the Notifications











