எல்லாம் நாடகமா கவின்.. சிம்பத்தி ஓட்டுக்காக செய்த செட்டப்பா? கடுப்பில் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற கவினின் நண்பர் அவரை அறைந்ததை சிலர் டிராமா என கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், கன்டென்ட் கொடுப்பதற்காக 4 பெண்களிடம் கடலை போட்டார். இந்த விஷயம் விவகாரமானதால் நடிகர் கமல்ஹாசன் அவரிடம் விளக்கம் கேட்டார்.
அதற்கு நான்கு பேரை காதலிப்பது போல் நடித்தால் பிரச்சனை வராது என்று அப்படி செய்ததாக கூறினார். அப்போது இது தவறில்லையா என்று கேட்டு கண்டித்தார் கமல்.

பின்னர் காதல்
ஒரு பக்கம் சாக்ஷியை காதலித்து கொண்டே மறுப்பக்கம் லாஸ்லியாவிடம் கடலை போட்டு வந்தார் கவின். சாக்ஷி இருக்கும் வரை நட்பாக இருந்த அவர்களின் உறவு, அவர் சென்ற பிறகு காதலாக மாறிவிட்டது.

மக்கள் கோபம்
மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவருக்கும் பட்டப் பெயர் வைத்து கிண்டல் செய்வது, பின்னால் கேவலமாக பேசி கலாய்ப்பது என இருந்து வந்தார் கவின். இதனால் கவின் மீது கடும் கோபத்தில் உள்ளனர் மக்கள்.

பளார் விட்ட நண்பர்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள், கவினின் குடும்பத்தினர் சார்பாக அவரது நண்பர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது கவின் செய்த தவறுகளை பட்டியலிட்ட அவர், யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் பளார் என ஓங்கி அறைந்தார்.

பாராட்டு
இதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், மக்கள் செய்ய நினைப்பதை நீங்கள் செய்து விட்டீர்கள் என ஒரு புறம் பாராட்டி வருகின்றனர்.

இதுவும் நடிப்புதான்
அதே நேரத்தில் இதுவும் நடிப்புதான் என்று சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர். மேலும் நாமினேஷனில் உள்ள கவின் சிம்பத்தி ஓட்டுகளை பெற விஜய் டிவியே இப்படி ஒரு டிராமாவை ஏற்பாடு செய்துள்ளது என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
விஜய் டிவியின் திட்டம்
என்ன டிராமாவா?? இது விஜய் டிவியின் திட்டமிட்ட செயல் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

காப்பாற்றும் விஜய் டிவி
ஏற்கனவே மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள கவின், இன்னும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படாமல் உள்ளார். அவரை விஜய் டிவிதான், தங்களின் போட்டியாளர் என்பதற்காக காப்பாற்றி வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











