பூவே உனக்காக தொடரில் இணையும் முன்னாள் கனவுக்கன்னி... யார்ன்னு தெரியுமா?

சென்னை : சன் டிவியின் முக்கியமான மற்றும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் தொடர் பூவே உனக்காக. இந்தத் தொடர் கடந்த 2020 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

பூவே உனக்காக தொடர்

பூவே உனக்காக தொடர்

கடந்த 2020 முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே உனக்காக. ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் இந்த தொடரில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கதையில் ட்விஸ்ட் காணப்படுவது மட்டுமின்றி இந்தத் தொடரிலிருந்து அதிகமான நடிகர்கள் விலகுவதிலும் ட்விஸ்ட்கள் தொடர்ந்து வருகிறது.

விலகிய லிவிங்ஸ்டன் மகள்

விலகிய லிவிங்ஸ்டன் மகள்

நாயகியின் தோழி கீர்த்தியாக நடித்துவந்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா முதலில் தொடரிலிருந்து விலகினார். தான் மேற்படிப்பு படிக்கவுள்ளதாக காரணம் கூறிய அவர் தற்போது அருவி தொடரில் நடித்து வருகிறார். இதையடுத்து தொடரில் கீர்த்தி இறந்ததாக காட்டப்பட்டது.

நாயகி விலகல்

நாயகி விலகல்

தொடர்ந்து ஆமணி, ஸ்ரீனிஷ், விக்னேஷ் ஆகியோர் தொடரிலிருந்து விலகினர். இதெல்லாம் கம்மிதான் என்பது போல தொடரில் பூவரசியாக நடித்துவந்த ராதிகா ப்ரீத்தியும் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக வர்ஷினி என்பவர் தற்போது நடித்து வருகிறார். இந்த மாற்றங்கள் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.

இணையும் முன்னாள் ஹீரோயின்

இணையும் முன்னாள் ஹீரோயின்

கதையில் மட்டுமின்றி கேரக்டர் மாற்றத்திலும் அதிரடியாக இருந்து வருகிறது பூவே உனக்காக தொடர். இந்நிலையில் இந்த வாரத்தில் இந்த தொடரில் தமிழ் சினிமாவின் முன்னாள் கனவுக்கன்னி ஒருவர் இணையவுள்ளதாக தொடரின் ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் கெஸ்ட் சோனியா அகர்வால்

ஸ்பெஷல் கெஸ்ட் சோனியா அகர்வால்

அவர் வேறு யாருமில்லை. நடிகை சோனியா அகர்வால்தான். வரும் ஞாயிறன்று இந்தத் தொடரின் ஒரு மணிநேர ஸ்பெஷல் எபிசோடு பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த எபிசோடில் முக்கியத் திருப்பம் தரும் சிறப்பு கேரக்டரில்தான் சோனியா அகர்வால் நடிக்கவுள்ளார். அதன் பிரமோ தற்போது வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X