Pournami serial: இந்த சோனுவுக்கு என்ன நக்கல் பார்த்தீங்களா?

சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் முதலில் அம்மாவின் ஸ்தானத்தில் பவுர்ணமியின் சித்தியாக இருக்கும் வாசுகியை அடைய விரும்பினான். இப்போது, இதை எச்சரிக்க போன பவுர்ணமியை அடைய விரும்புகிறான்.

இத்தனைக்கும் சோனுவுக்கு கல்யாணம் ஆகி மனைவியும் இருக்கிறாள். சித்தியை அடைய விரும்பிய சோனுவுக்கு வயசும் எவ்வளவு இருக்கும் என்று பாருங்கள். அவனுக்கு இன்னும் பெண்கள் மீதான மோகம் தணியவில்லை.

பவுர்ணமியை அடைய வேண்டும் என்று அவள் அப்பா சக்ரவர்த்தியின் கம்பெனியில் நாற்பது சதவிகிதம் ஷேர் ஹோல்டராகவும் ஆகி சக்கரவர்த்திக்கு டார்ச்சர் குடுக்கறான். கடைசியாக பவுர்ணமியை குடுத்தா ஷேரை திருப்பி வாங்கிக்கறதா சொல்றான்.

 பவுர்ணமியை செய்துக்கோ

பவுர்ணமியை செய்துக்கோ

அவள் என்னோட மகளே இல்லை...நீ அவளை என்ன வேணும்னாலும் செய்துக்கோ .எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லைன்னு சொல்றார் அப்பா சக்ரவர்த்தி. காரணம் ரொம்ப சிம்பிள்தான். பவுர்ணமி பிறந்த உடனே அவர் உயிருக்கு உயிரா நேசிச்ச மனைவி வசந்தி இறந்துடறாங்க. அதனால், பெத்த அப்பாவுக்கு மகள் பவுர்ணமியை பிடிக்கலை.முகத்தில்கூட விழிப்பதில்லை, சுத்தமா வெறுக்கறார்.

 வாசுகியை கல்யாணம்

வாசுகியை கல்யாணம்

சோனு அடையணும்னு துரத்தி துரத்தி ஆசைப்பட்ட வாசுகியை சக்ரவர்த்தி ரெண்டாம் தாரமா கல்யாணம் செய்துக்கறார். இது தெரிந்துதான், வாசுகியை மிரட்ட போனபோது,பவுர்ணமி தன் சித்தியை காப்பாத்தறா.அப்போ பவுர்ணமியைப் பார்த்த சோனு, வாசுகியை விட்டுட்டு இப்போ பவுர்ணமியைத் துரத்த ஆரம்பிக்கறான். ஷேரை வாபஸ் வாங்கியும், பவுர்ணமி சோனுவை மிரட்டி வச்சு, அப்பாவுக்கு நல்லது செய்தும் அவளை பிடிக்கலை சக்கரவர்த்திக்கு.

 பிளாங்க் செக்

பிளாங்க் செக்

மீண்டும் சோனு வந்து சக்ரவர்த்தியை மிரட்ட, அவளை நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ. அதுக்கு கூலியா இந்தா இந்த பிளாங்க் செக் வச்சுக்கோ.எவ்ளோ வேணும்னாலும் பணம் எடுத்துக்கோன்னு குடுக்கறார் பெத்த அப்பா. அவன் வீட்டுக்கு வந்து பவுர்ணமியைத் தேட, அவள் வீட்டில் இல்லை.

 நக்கலா கூப்பிடறான்

நக்கலா கூப்பிடறான்

வாசுகி வாசுகின்னு பித்து பிடிச்சு திரிஞ்ச சோனு, இப்போது வாசுகியை நக்கலா அத்தான்னு கூப்பிடறான். உன் புருஷன் எனக்கு இந்த செக்கை குடுத்து, உன் பொண்ணு பவுர்ணமியை என்ன வேணும்னாலும் செய்துக்கோன்னு சொல்லி இருக்கார் அத்தைன்னு நக்கலா சொல்றான். அவளை ஒன்னும் செய்யாதே விட்டுடுன்னு கெஞ்சறாங்க வாசுகி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X