Soori Saregamapa: நீங்க மாட்டச் சொன்ன அத்தனை லைட் வெளிச்சமும்.. சரிகமப ஷோவில் எமோஷனலான சூரி!

சென்னை: பரோட்டா சூரியாக சாதாரண காமெடியனாக கூட்டத்தோடு கூட்டமாக வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான நடிகர் சூரி முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் ஹீரோ அவதாரமும் எடுத்துள்ளார்.

வெற்றிமாறன் படத்தில் ஹிட்லர் போல இருக்கும் சேத்தனிடம் கடைசி வரை மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ன தண்டனை கொடுத்தாலும் செய்கிறேன் என நடித்து தனது நடிப்பில் மிரட்டி எடுத்து விட்டார் சூரி.

அந்த கிளைமேக்ஸ் காட்சியில் விஜய்சேதுபதியை விரட்டிப் பிடிக்கும் இடத்திலும் மாஸ் காட்டிய சூரி ஜீ தமிழின் சரிகமப நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில், லைட் மேனை பார்த்து எமோஷனலான தருணங்கள் புதிய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.

 Soori gets emotional after seeing light man Natraj in Saregama Show

ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேனே: சினிமாவில் ஜோக்கராக காமெடி காட்சிகளில் நடித்து வந்த சூரிக்கு சரியாக காமெடி கூட வரவில்லை என விமர்சித்து வந்த பலரும் விடுதலை படத்தில் சூரியின் நடிப்பை பார்த்து மிரண்டு போயுள்ளனர்.

காதல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் பெண்களை நிர்வாணப்படுத்தி போலீஸ் அதிகாரிகளே கொடுமைப்படுத்தும் போது கோபப்படும் காட்சிகளிலும் தனது தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் சூரி.

விடுதலை 2 படத்திலும் சூரிக்கு வெயிட்டான ரோல் இருக்கும் நிலையில், கொட்டுக்காளி உள்ளிட்ட மேலும், சில படங்களிலும் ஹீரோவாக கமிட் ஆகி உள்ளார்.

 Soori gets emotional after seeing light man Natraj in Saregama Show

லைட் மேனாக இருந்த சூரி: சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பாக சில படங்களில் லைட் மேனாக பணியாற்றி இருக்கிறார் நடிகர் சூரி. கோடா லைட் கட்டுறது, பேபி லைட் போடுவது என கஷ்டப்பட்டு வேலை பார்த்த சூரியின் முதல் முதலாளியை சரிகமப நிகழ்ச்சியில் சந்தித்த நிலையில், ரொம்பவே எமோஷனலாகி விட்டார். அதன் காட்சிகளை தற்போது ஜீ தமிழில் சரிகமப லேட்டஸ்ட் ப்ரமோவாக வெளியிட்டுள்ளனர்.

தொகுப்பாளினி அர்ச்சனா நம்மளோட இந்த சரிகமப ஷோவுக்கு லைட் மேனாக உள்ள நடராஜ் அண்ணனை மேடைக்கு அழைக்கிறேன் என அழைத்த நிலையில், சிறப்பு விருந்தினராக அந்த நிகழ்ச்சிக்கு சென்ற சூரி தனது முதல் முதலாளியை பார்த்து நெகிழ்ந்து போன தருணங்கள் ரசிகர்களை உருகச் செய்துள்ளது.

 Soori gets emotional after seeing light man Natraj in Saregama Show

நீங்க கட்டச் சொன்ன லைட் வெளிச்சம் இன்னைக்கு என் மேல: ஊருக்குப் போகாத இங்கேயே இரு கண்டிப்பா எதாவது வாய்ப்பு கிடைக்கம்னு நான் டவுன் ஆகும் போதெல்லாம் நடராஜ் அண்ணன் தான் எனக்கு ஊக்கம் கொடுப்பாரு.. நடராஜ் அண்ணே.. நீங்க கட்ட சொன்ன லைட் வெளிச்சம் எல்லாம் இன்னைக்கு என் மேல படுதுண்ணே என ரொம்பவே உருக்கமாக பேசிய அழகான தருணங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X