Kanmani serial: சவுந்தர்யா கண் விழிச்சாச்சு இனி முத்துவா சவுண்டா?

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் கரண்ட் ஷாக் அடிச்சு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சவுந்தர்யா கண் விழிச்சுட்டா.

இனிமே மறுபடியும் சின்னவருக்கு முத்துவா, இல்லை சவுந்தர்யவான்னு போட்டி வந்துரும். மேட்டரை ஜவ்வு மாதிரி இழுக்காம சொல்லிட்டாங்கன்னா நல்லாருக்கும்.

சவுண்டா, முத்துசெல்வியான்னு பல மாசமா இழுக்கடிச்சு ஜவ்வு மிட்டாயை இத்துப்போன மிட்டாயாக்கிட்டாங்க.

சவுந்தர்யா கண்ணன்

சவுந்தர்யா கண்ணன்

கண்ணன் மனசுல சவுந்தர்யா இருந்த போது ,சவுந்தர்யா மனசுல கண்ணன் இல்லை.கண்ணன் சவுண்டை மனசுல போட்டு புதைச்சுட்டபோது சவுந்தர்யா மனசுல கண்ணன் குடியேறிட்டான். இதை மாமாகிட்ட சொல்லுங்கன்னு சவுந்தர்யா சிக்னல் குடுத்த போது,காலம் கடந்துருது. முத்து செல்வியை கல்யாணம் கட்டிக்கறதா கண்ணன் வாக்கு குடுத்துடறான். அந்த கட்டாயத்துக்கு கண்ணன் தள்ளப்படறான்.

சின்னவர் முத்துச்செல்வி

சின்னவர் முத்துச்செல்வி

ஆனால்,திட்டமிட்டே ஒண்ணும் தெரியாதவள் மாதிரி இருந்து, சின்னவரை இரண்டாவது நாளில் இருந்தே காதலிக்க ஆரம்பிச்சுடறா.என்னதான் அம்மா இல்லாமல் வளர்ந்த பொண்ணு என்றாலும், ஒரு ஆன் கூட போட்டோ எடுத்துக்கறது, அவனின் சட்டையை எடுத்து போட்டுக்கறது,கூலிங் கிளாஸை போட்டுக்கிட்டு பைக்கில் உட்கார்ந்துக்கறதுன்னு ஒரு காதலி செய்யற எல்லா விஷயமும் செய்யறா. ஆனா, சின்னவரை சவுந்தர்யா அம்மா காதலிக்கறதை ஊரே பேச இவளுக்கு மட்டும் ஒண்ணும் தெரியாதாம். வீட்டு சமையல்க்காரரே வந்து சொல்றார்.அப்போதும் முத்துசெல்விக்கு ஒண்ணும் தெரியாதாம். இதெல்லாம் கொஞ்சம் இயக்குநர் கவனமில்லாமல் செய்த சொதப்பல்கள்.

சவுந்தர்யா நலம்

சவுந்தர்யா நலம்

இந்த நிலையில்தான் சவுந்தர்யா உடல்நலம் தேறி கண் விழிச்சுடறா. ஆனா, முத்து செல்வியையம், அவ தங்கச்சியையும் லாரிக்காரன் கடத்திகிட்டு போயிடறான். சின்னவரு கண்ணன் இப்போது கோயில் திருவிழாவில் நேர்த்திக் கடன் செலுத்துவதில் பிஸியாக இருக்கான்.இது முடிஞ்சதும், சவுந்தரியாவை பார்க்க ஒடுவான. பிறகு முத்துசெல்வியைத் தேடப் போவான். முத்து செல்வி அப்பா மாயனின் பேச்சை இப்போது கேட்க ஆரம்பிச்சு இருக்கார்.

அடம் பிடிச்சால்

அடம் பிடிச்சால்

இதுக்கு மேலும் முத்துச்செல்வி சின்னவரை வேணும்னு சொன்னாலும், முத்துச்செல்வி அப்பா சின்னவருதான் மாப்பிள்ளையா வேணும்னு நினைச்சாலும் நல்லாவே இருக்காது. மானம் கெட்டத் தனமா இருக்கும். இதை பளிச்சுன்னு நேரடியா சொல்லாம ஜவ்வு மாதிரி இழுத்து, அரைச்ச மாவையே அரைச்சு நம்மை கடுப்பேத்த ரெடியா இருக்காங்க. பிடிக்கலேன்னா சேனலை மாத்துங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X