Bigg boss: ஃபைனல்ஸ் முடிஞ்சதும் காதலனை சந்தித்த சௌந்தர்யா.. தீயாக பரவும் போட்டோ!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். சௌந்தர்யா இரண்டாவது இடத்தையும், விஷால் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இதில் பிக் பாஸ் கிராண்ட் பினாலே முடிந்ததும் வெளியே வந்த சௌந்தர்யா தனது காதலனை சந்தித்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஜோடியாக என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்க போகின்றார் என்பதால், அந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். சிலர் விஜய் சேதுபதியை விமர்சித்தாலும், பலர் அவர் சிறப்பாக தொகுத்து வழங்குவதாக பாராட்டி வந்தனர்.

bigg boss 8 soundarya vishnu 8

பிக் பாஸ் சீசன் 8: மிகவும் சுவாரஸ்யமாக சென்ற பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால், ரயன், பவிதா ஜனனி என ஐந்து போட்டியாளர்கள் டாப் 5 இடத்தை பிடித்தனர். இதில், ரயனுக்கு நான்காவது இடமும், பவித்ரா ஐந்தாவது இடத்தை பிடித்தார். முத்து, சௌந்தர்யா, விஷால் இவர்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்ப்பு ரசிகர்களிடம் இருந்த நிலையில், மூன்றாவது இடத்தை விஷால் பெற்றார். இதில், முத்துக்குமாரின் கையை விஜய்சேதுபதி உயர்த்தியதும் அங்கிருந்தவர்கள் மட்டுமில்லாமல் இணையத்திலும் அவருக்கு வாழ்த்து குவிந்தது.

இணையத்தில் மோதல்: ஆனால் முத்துக்குமரன் டைட்டிலை வென்றது சௌந்தர்யா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா ஆதரவாளர்கள் இடையே சோஷியல் மீடியாவில் மோதல்கள் உண்டாகி முத்துவை ட்ரோல் செய்து வருகின்றனர். அதே போல முத்துவின் ஆதரவாளர்கள், முத்துக்குமார், திறமையால் ஜெயித்தார். உங்களைப்போல பிஆர்ஓவை வைத்துக்கொண்டு ஜெயிக்கவில்லை என்று சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

காதலருடன் போட்டோ: இப்படி இணையத்தில் ஒரு பக்கம் பஞ்சாயத்து நடந்து கொண்டு இருக்க, பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி முடிந்ததும். வெளியே வந்த சௌந்தர்யாவை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராக காத்து இருந்தனர். அவர்களுடன் சௌந்தர்யா இறங்கி ஆட்டம் போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், தனது காதலன் விஷ்ணுவை சந்தித்த போட்டோவும் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த பேன்ஸ் செம ஜோடி என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Marry Me: முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் விஷ்ணு வந்த போது, சௌந்தர்யா "marry me" என்று கிரீமில் ஒரு பிளேட்டில் எழுதி கொடுத்தார். இதைப்பார்த்த விஷ்ணு, நான் உன்னைச சர்ப்ரைஸ் பண்ணலாம் என்று நினைத்தால், நீ என்னை சர்ப்ரைஸ் பண்ணிட்ட என்றார். மேலும், என்னுடைய வாழ்க்கையில் இந்த மாதிரி சம்பவம் இதுவரைக்கும் நடந்ததே இல்லை என்று விஷ்ணு சொல்ல சௌந்தர்யா என் வாழ்க்கையிலும் இதுபோல நடக்கலடா என்று, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காதலை தைரியமாக கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X