குழந்தை குறித்த உண்மையை போட்டுடைத்த சவுந்தர்யா... பரிதவிப்பில் கண்ணம்மா!
சென்னை : விஜய் டிவியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா.
விறுவிறுப்பான காட்சிகளுடன் ரசிகர்களை கட்டிப் போட்டுவரும் இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிப்பரப்பாகி வருகிறது.
தன்னுடைய குழந்தை குறித்த உண்மையை தெரிந்துக் கொள்ளும் கண்ணம்மாவின் பரிதவிப்பு இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியில் பல்வேறு திருப்பங்களுடன் ரசிர்களை கட்டிப் போட்டு வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவாக நடித்துவரும் நடிகர்கள் சிறப்பான மற்றும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சவுந்தர்யா, வெண்பா கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்துள்ளது.

குழந்தை குறித்த உண்மை
இந்நிலையில் தன்னுடைய குழந்தை குறித்து அனைவரிடமும் கேள்வி எழுப்புகிறார் கண்ணம்மா. ஆனால் அவளுக்கான பதில் கிடைக்காத நிலையில், வெண்பாவிடம் கேட்க, அவளோ, பாரதியை விவாகரத்து செய்தால் அவளுடைய குழந்தை குறித்த உண்மையை கூறுவதாக கூறுகிறாள்.

கண்ணம்மாவின் விவாகரத்து முடிவு
இதையடுத்து விவாகரத்து முடிவை கண்ணம்மா எடுக்க, சவுந்தர்யா வந்து அதை தடுத்து ஹேமா தான் கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மையை உடைக்கிறார். அவளை போலவே விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளிட்டவற்றை கொண்ட ஹேமா அவரது குழந்தை என்று விளக்குகிறார்.

பரிதவிப்பில் கண்ணம்மா
இதையடுத்து வார்த்தைகள் இன்றி பரிதவிக்கிறாள் கண்ணம்மா. இன்றைய தினம் விஜய் டிவி வெளியிட்டுள்ள பிரமோவில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து கண்ணம்மா எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என திருப்பங்களுடன் அடுத்தடுத்த காட்சிகளை எதிர்பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா சீசன் 2?
இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவடைந்து அடுத்ததாக சீசன் 2 வெளியாக உள்ளதாக தெரிகிறது. இதற்கான பிரமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஹேமா, லஷ்மி உள்ளிட்டவர்கள் வளர்ந்தபின்பு நடைபெறும் சூழல்களைக் கொண்டு தொடர் நிகழும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











