Barathi Kannamma Serial: சவுந்தர்யா அம்மா நல்லவங்கதான் போல!

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணமமை சீரியலில் கறுப்பே ஆகாதுன்னு சொன்ன சவுந்தர்யா அமமா கருப்பு கண்ணம்மாவையும், தனது மகன் பாரதியையும் ஹனிமூனுக்கு சுவிச்சர்லாந்து அனுப்ப டிக்கெட் புகே பண்ணித் தர்றாங்க.

கண்ணம்மா வீட்டுக்கு போயிருக்கும் பாரதிக்கும் ,கண்ணம்மாவுக்கும் இந்த விஷயம் தெரியாது. கருப்பு பிடிக்காதுன்னு கண்ணாம்மாவை வேலைக்காரியா கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்ட சவ்ந்தர்யா அம்மா இப்போ ரெண்டு பேரும் ஹனிமூன் போக அனுப்பி வைக்கறாங்க.

என்ன இருந்தாலும் பெத்த பிள்ளை பாரதி. அவனுக்கு தன் மீது ஒரு சந்தேகம் வந்துவிட்டது என்று தெரிந்ததும், இந்த அருமையான வேலையை செய்யறாங்க சவுந்தர்யா அம்மா.

சுவிச்சர்லாந்துக்கு டிக்கெட்

சுவிச்சர்லாந்துக்கு டிக்கெட்

பாரதி வீட்டுக்கு கொரியர் வருது. அதை அறிவுமணி வாங்கிப்பார்த்துட்டு,அ டி சக்கை பாரதி கண்ணம்மாவை ஹனிமூனுக்கு சுவிச்சர்லாந்து அழைச்சுட்டுப் போக டிக்கெட் போட்டு இருக்கான் போல இருக்கேன்னு சொல்லிகிட்டே சந்தோஷமா துள்ளிக் குதிச்சு ஒடி வர்றா.இதை சவுந்தர்யா அமமா பார்த்துகிட்டே இருந்து, கிட்டே வந்த உடனே கேட்கறாங்க.

என்னது கையில்?

என்னது கையில்?

அறிவு கையில் என்ன..இப்படி குதிச்சுக்கிட்டு வரேன்னு கேட்கறாங்க. அதை விடுங்க சித்தி..இதை தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு இன்னும் கோவம் வரும்னு சொல்றா. அறிவு உன் கையில ஃபிளைட் டிக்கெட்தானே இருக்குன்னு கேட்கறாங்க.ஆமாம் சித்தின்னு இவ சொல்ல, சுவிச்சர்லாந்து போறக்குத்தானேன்னு இவங்க கேட்க...எப்படி சித்தி இப்படி சரியா சொல்றீங்கன்னு அறிவு மணி கேட்கறா.

டிக்கெட் போட்டதே

டிக்கெட் போட்டதே

டிக்கெட் போட்டதே நான்தான்னு சவுந்தர்யா அம்மா சொல்ல, அவங்க கணவர் மயக்கம் போட்டு விழற மாதிரி நடிக்கறார். சும்மா கிண்டல் பன்னாதீங்க சித்தப்பா..என்ன சித்தி சொல்றீங்கன்னு அறிவு கேட்க,அதே கேள்வியை கணவரும் கேட்கறார். உனக்குள்ள இவ்வளவு நல்ல குணம் இருக்கான்னு கேட்கறார்.

பாரதி கேட்ட கேள்வி

பாரதி கேட்ட கேள்வி

இல்லைங்க பாரதி என்னை பார்த்து அன்னிக்கு ஒரு கேள்வி கேட்டுட்டான்.அவனோட முதலிரவு நடக்கற அன்னிக்கு பொய்யா ஆஸ்பத்திரியில் இருந்து வர்ற மாதிரி ஒரு போன் கால் வந்துச்சாம்.நான்தான் அதை பண்ணினேன்னு கோவத்தில் என்னை வந்து கேட்டான்.அப்புறம் எனக்கு அந்த மாதிரி கேவலமான எண்ணம் வராதுன்னு சாரி கேட்டுட்டு போயிட்டான்.ஆனா,எனக்குத்தான் மனசு சரியில்லை.அதான் டிக்கெட் புக் பண்ணினேன்னு சொல்றாங்க.

அஞ்சலி சவுந்தர்யா

அஞ்சலி சவுந்தர்யா

சவுந்தர்யா அம்மா படுக்கப் போகும் சமயத்தில் ஒரு போன் வருது.அஞ்சலி போன் செய்து உங்ககிட்ட பேசணும் அத்தைன்னு சொல்றா. எதுவும் கோரிக்கை வைக்கலேன்னா பேச வர்றேன்னு சவுந்தர்யா அம்மா சொல்ல ,இல்லை அத்தைன்னு சொல்றா அஞ்சலி. ஆனால், மறுநாள் ஹோட்டலில் காத்துக்கிட்டு இருக்கும் போது, என் அழகைப் பார்த்து வீட்டில் இருக்கறவ அழகில்லைன்னு அத்தைக்கு ஃபீலிங் வரணும்னு சொல்லிக்கறா.

கெடுத்தே முதலிரவை

கெடுத்தே முதலிரவை

நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கணும்னுதான் சந்திக்க ஒப்புக்கிட்டேன்னு இவங்க சொல்ல, உங்களை நான் அத்தைன்னு கூப்பிடலாமான்னு கேட்கறா அஞ்சலி. அத்தைன்னு கூப்பிட்டு அவங்களையே மாமியாரா ஆக்கிக்கணும்னு கட்டாயம் ஒண்ணுமில்லையே பரவால்ல அத்தைன்னு கூப்பிடுன்னு சவுந்தர்யா அம்மா சொல்றாங்க. ஆமா,பார்தி முதலிரவு அன்னிக்கு போன் செய்து அவங்க முதலிரவை ஏன் கெடுத்தேன்னு கேட்க, திணறிப் போய் அஞ்சலி எனக்கு ஒண்ணும் தெரியாது அத்தைன்னு சொல்றா.

நடிக்காத, பொய் சொல்லாதே.. உன் போனில் இருந்துதான் ஆஸ்பத்திரிக்கு கால் போயிருக்குன்னு சவுந்தர்யா அம்மா அழுத்தமா சொல்றாங்க. முழிக்கறா அஞ்சலி.. இவதான், அகிலனை விட்டு, பாரதியை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டவ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X