பிக் ஷாக் கொடுத்த பிக்பாஸ்.. இந்த வாரம் யாரு எவிக்ட்டானதுன்னு பாருங்க.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 5 பேரில் வந்து நிற்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் 100 நாட்களை கடந்து கிரான்ட் ஃபினாலேவை சந்திக்க இருக்கிறது. இதனால் அதிரடியாக ஆட்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் பிக்பாஸ்.

டபுள் எவிக்ஷன்

டபுள் எவிக்ஷன்

கடந்த வியாழக்கிழமை 5 லட்சம் ரூபாய் பணத்தைக் காட்டி கவினை வெளியே இழுத்தார் பிக்பாஸ். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் இனி டபுள் எவிக்ஷனுக்கு வாய்ப்புள்ளது என கடந்த வாரமே அறிவித்தார் கமல்.

முகெனை தவிர..

முகெனை தவிர..

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களுமே மக்களின் செல்வாக்கையும் மதிப்பையும் பெற்றுள்ளனர். முகென் ஏற்கனவே ஃபைனலுக்கு தகுதி பெற்றுவிட்டதால் அவரை தவிர மற்ற அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் எவிக்ஷன் லிஸ்ட்டில் இருந்தனர்.

கணிக்க முடியாத நிலை

கணிக்க முடியாத நிலை

இதனால் இந்தவாரம் யார் வெளியே செல்வார்கள் என்று கணிக்க முடியாத நிலையில் இருந்தது. ஆனாலும் ஷெரின்தான் வெளியே செல்வதற்கான அதிகபட்ச வாய்ப்பை பெற்றிருப்பதாக என கூறப்பட்டது.

தர்ஷன் வெளியேற்றம்

தர்ஷன் வெளியேற்றம்

அவருக்கு அடுத்தப்படியாக லாஸ்லியா வெளியேறலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மக்களின் செல்லப்பிள்ளையான தர்ஷன் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

தர்ஷன் வெளியேற்றப்பட்டிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்த தகவல் கிடைத்துள்ளது. தர்ஷன் எவிக்ட்டான தகவலை அறிந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தர்ஷன் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நேர்மையிலும் குறையில்லை

நேர்மையிலும் குறையில்லை

ஆரம்பம் முதலே எந்த டாஸ்க்காக இருந்தாலும் சரி, முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று வந்தவர் தர்ஷன். தர்ஷனின் நேர்மையையும் குறை சொல்ல முடியாது. தவறு என படுவதை பட்டேன நேருக்கு நேர் யோசிக்காமல் கேட்டுவிடுவார் தர்ஷன்.

யாருக்கு பிரச்சனை என்றாலும்

யாருக்கு பிரச்சனை என்றாலும்

அது வனிதா மற்றும் சரவணன் விஷயத்தில் தெளிவாக தெரிந்தது. ஏன் கவின் விவகாரத்திலும் தர்ஷன் நியூட்ரலாகவும் நேர்மையாகவும்தான் இருந்தார். யாருக்கு பிரச்சனை என்றாலும் முன்னால் வந்து குரல் கொடுத்துவந்தார் தர்ஷன்.

மக்கள் ஏமாற்றம்

மக்கள் ஏமாற்றம்

காதல் கடலை என கவின் பின்னால் சுற்றி, பெற்றோரை நோகடித்த லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க, மக்களிடம் வரவேற்பை பெற்ற தர்ஷன் வெளியேற்றப்பட்டிருப்பது பார்வையாளர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

பார்வையாளர்கள் அதிருப்தி

பார்வையாளர்கள் அதிருப்தி

நிகழ்ச்சி 50 நாட்களை கடந்த போதுகூட, டைட்டில் வின்னராகும் வாய்ப்பு தர்ஷனுக்கே உள்ளது என ஹவுஸ்மேட்ஸ் தெரிவித்தனர். இந்நிலையில் ஃபைனல்ஸ்க்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டிருப்பதன் மூலம் நிகழ்ச்சியின் உண்மைத்தன்மையும் நேர்மையும் தெரிகிறது என்று பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X