தர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கமல்!

Recommended Video

BIGG BOSS 3 : Indian-2 to Star Tharshan with Kamal Hassan : இந்தியன் 2 படத்தில் நடிக்கும் தர்ஷன்?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுக்கு இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் வாய்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த மாடலான இவர், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தார்.

சில விளம்பரப் படங்களில் நடித்துள்ள தர்ஷன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். தர்ஷன்தான் வெற்றியாளர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நேர்மையாக விளையாடியவர்

நேர்மையாக விளையாடியவர்

இதனால் சக ஹவுஸ்மேட்களும் பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஏன் தர்ஷனே தான் எவிக்ட்டானதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே மிகவும் நேர்மையாகவும் தைரியமாகவும் விளையாடி வந்தவர் தர்ஷன்.

இந்தியன் 2வில் வாய்ப்பு

இந்தியன் 2வில் வாய்ப்பு

தர்ஷன் வெளியேற்றம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் தர்ஷனுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் அறிவிப்பு

கமல் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரான்ட் பினாலே இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இதற்கான எபிசோடு நேற்றே காட்சியாக்கப்பட்ட நிலையில், இந்தியன் 2 படத்தில் தர்ஷன் நடிப்பது தொடர்பாக கமல் அறிவித்ததாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேறிய கையோடு, லிப்ரா நிறுவனம் தர்ஷனுக்கு பட வாய்ப்பை அறிவித்தது. இந்நிலையில் கமலும் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X