திடீர் திருப்பம்.. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கவின்.. அதிர்ச்சியில் ஆர்மியினர்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 93 : வீட்டின் ராஜாவான தர்ஷன்

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கவின் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் தான் நிகழ்ச்சியில் நீடிக்க வேண்டும் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக 4 பெண்களுடன் கடலை போட்டார். காதலிப்பது போல் நடித்தார்.

நான்கு பேரை காதலித்தால் பிரச்சனை வராது என நினைத்து நான்கு பேரை காதலித்ததாக கமலிடம் விளக்கம் வேறு கொடுத்தார். இதனைக் கேட்டுக் கடுப்பான கமல், இது தவறில்லையா என கேட்டு கண்டித்தார்.

கிண்டல்

கிண்டல்

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன், கஸ்தூரி, மதுமிதா என பலருக்கும் பட்டப் பெயர் வைத்து கிண்டல் செய்தார். பின்னால் கேவலாமாகவும் பேசினார். கடைசியாக லாஸ்லியாவை காதலித்த கவின், சேரன் அப்பா அப்பா என்று உன்னிடம் நடிக்கிறார் என தவறாக கூறி இருவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தினார்.

பாத்ரூம் வரை டார்ச்சர்

பாத்ரூம் வரை டார்ச்சர்

போதா குறைக்கு லாஸ்லியாவிடம் டபுள் மீனிங்கில் பேசி முகம் சுளிக்க வைத்தார். பெண் போட்டியாளர்கள் பாத்ரூமுக்கு செல்லாதபடி பின்னாடியே சென்று டார்ச்சர் செய்து வந்தார்.

மக்கள் கோரிக்கை

மக்கள் கோரிக்கை

இதனால் வெறுப்பான மக்கள் கவினை முதலில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என கொடி பிடிக்காத குறையாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் விஜய் டிவி நேர்மையான போட்டியாளர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டு ஒரு டாஸ்க்கை கூட முறையாக செய்யாத கவினை, தங்களின் ஆள் என்பதால் விஜய் டிவி வைத்திருப்பதாக கூறி கழுவி ஊற்றினர்.

பிக்பாஸ் வழங்கிய வாய்ப்பு

பிக்பாஸ் வழங்கிய வாய்ப்பு

இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரமோவில் 5 லட்சம் ரூபாய் பணத்தை ஹவுஸ்மேட்ஸிடம் காட்டும் பிக்பாஸ், உங்களில் ஒருவர்தான் வெற்றி பெற்று 50 லட்சத்தை பெறமுடியும். இதற்கிடையில் ரூபாய் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு இந்த வீட்டை விட்டு இன்றே வெளியில் செல்லும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது என்கிறார்.

தடுத்த லாஸ்லியா

தடுத்த லாஸ்லியா

இதனை கேட்ட கவின், தான் 5 லட்சத்துடன் வெளியேறப்போவதாக எழுந்து நிற்கிறார், அப்போது சாண்டியும் லாஸ்லியாவும் கவினை தடுக்கின்றனர். இவ்வாறு முடிந்தது இன்றைய மூன்றாவது புரமோ.

வெளியேறிய கவின்?

வெளியேறிய கவின்?

இந்நிலையில் கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. கவின் வெளியேறிய தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X