பிக்பாஸ் கொண்டாட்டத்துல அவரு அவங்கக்கிட்ட பேசலயாம்.. ஏறெடுத்துக்கூட பார்க்கலயாம்.. சோகத்தில் ஆர்மி!

Recommended Video

Bigg Boss Kavin Busy in Shooting: Kavin வெளிநாட்டில் பட Shooting

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தின் போது கவின் லாஸ்லியாவிடம் பேசவில்லை என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும் பெரும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்தது.

இந்நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி புதுச்சேரி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சனை கூட எழுப்பின. இதில் பங்கேற்ற கவின், தான் நிகழ்ச்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக 4 பெண்களை காதலிப்பது போல் நடித்ததாக கூறினார். இதனால் விஜய் டிவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் பெரும் எதிர்ப்பு எழுந்தது.

சாக்ஷியை கழட்டிவிட்ட கவின்

சாக்ஷியை கழட்டிவிட்ட கவின்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கவினை காதலித்தார். ஏற்கனவே சாக்ஷியை காதலித்த கவின், லாஸ்லியா தன்னை காதலிப்பதை அறிந்து சாக்ஷியை கழட்டிவிட்டார்.

கைவிடாத காதல்

கைவிடாத காதல்

கவினுடனான தீவிர காதலால் சேரனை உதாசீனப்படுத்தினார் லாஸ்லியா. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதும் கவினுடனான காதலை அவர் கைவிடவில்லை.

மை கேம் சேஞ்சர்

மை கேம் சேஞ்சர்

ஆனால் தன்னுடனான காதல் உறவு குறித்து கவின் பேசும் போதெல்லாம் வெளியே போய் பேசலாம் வெளியே போய் பேசலாம் என்று அவாய்ட் செய்து வந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு கூட மை கேம் சேஞ்சர் என கவினை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.

பிரபலங்கள் நடனம்

பிரபலங்கள் நடனம்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான கொண்டாட்டம் நேற்று காட்சியாக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் நடனமாடியது தெரியவந்தது.

லாஸ்லியாவிடம் பேசவில்லை

லாஸ்லியாவிடம் பேசவில்லை

ஏற்கனவே இதற்கான ரிகர்சல் காட்சிகளை பிக்பாஸ் பிரபலங்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கவின், லாஸ்லியாவிடம் பேசவில்லை என தகவல் வெளியாகி வருகிறது.

பேச விரும்பவில்லை

பேச விரும்பவில்லை

கவின் லாஸ்லியாவின் முகத்தை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சீனியர் நடிகை ஒருவர் கேட்ட போது கூட, எனக்கு சில பொறுப்புகள் உள்ளது, இப்போது இதுகுறித்து பேசவிரும்பவில்லை என தெரிவித்ததாக தகவல் பரவி வருகிறது.

லாஸை புறக்கணிக்கும் கவின்

லாஸை புறக்கணிக்கும் கவின்

கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வருவதற்கு முன்பாகவே தான் ஒருவரை காதலித்ததாக கூறினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷியை காதலித்தார். இதனை தொடர்ந்துதான் லாஸ்லியாவை காதலித்தார். இந்நிலையில் புதிய படங்களிலும் கமிட்டாகியுள்ள கவின் லாஸ்லியாவுடனான காதலையும் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X