திடீர் திருப்பம்.. சிஷ்யாவுக்கு கப்பு இல்லை.. இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சாண்டி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியான நிலையில் இரண்டாவது இடத்தை பிடித்த போட்டியாளர் யார் என்பதும் தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 15 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் ஷெரின், லாஸ்லியா, சாண்டி, முகென் ஆகிய நான்கு பேர் பிக்பாஸ் ஃபைனல்ஸ்க்கு தகுதி பெற்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியான நிலையில் இரண்டாம் இடத்தை பிடித்தது யார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

விளையாடிய பிக்பாஸ்
அதாவது, சாண்டி தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பிக்பாஸும் அடிக்கடி சாண்டியுடன் விளையாடுவது, கலாய்ப்பது, சமாதானப்படுத்துவது என இருந்து வந்தார்.

சிஷ்யா என்ற பிக்பாஸ்
அதோடு பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக போட்டியாளர் ஒருவரை சிஷ்யா என்று பிக்பாஸ் அழைத்தது சாண்டியை தான். இதனால் சாண்டிதான் பிக்பாஸ்க்கு செல்லப்பிள்ளை, அதனால் அவரைதான் வின்னர் ஆக்குவார் என்றெல்லாம் பேச்சு எழுந்தது.

காக்கா பிடித்த சாண்டி
சாண்டியும் பிக்பாஸை குருநாதா குருநாதா என்று அழைத்து காக்கா பிடித்து வைத்திருந்தார். இதனால் சாண்டிதான் வின்னர் ஆவார் என கூறப்பட்டது.

சாண்டி ரன்னர்
ஆனால் முகென்தான் டைட்டிலை கைப்பற்றியுள்ளார். சாண்டிக்கு இரண்டாம் இடம்தான் கிடைத்துள்ளது. சாண்டிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அவரின் முன்னாள் மனைவியுமான காஜலும் டிவிட்டரில் பிரச்சாரம் செய்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
சாண்டி வின்னர் ஆவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்கள் சாண்டி இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டார் என்ற தகவலால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











