தங்கமே தங்கர்... உருக வைத்த அம்மாவின் கைபேசி!

By Sudha

சென்னை: தங்கர் பச்சனின் அம்மாவின் கைபேசி படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்புகள் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், அந்தப் படத்தின் அருமை எப்படி இருக்கப் போகிறது என்பதை சன் டிவியில் இன்று காலை ஒளிபரப்பான படம் குறித்த சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு துளி வெட்ட வெளிச்சமாக்கி ஒரு நொடி அனைவரையும் உருக வைத்து விட்டது.

தங்கர்பச்சனின் அம்மாவின் கைபேசி படப்பிடிப்பின்போதே பலரையும் கவர்ந்திழுத்து விட்டது. படம் எப்ப வரும் என்ற எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. இப்போது படம் திரைக்கு வரத் தயாராகி விட்டது. படம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை சன் டிவியில் இன்று போட்டனர்.

ஹீரோ சாந்தனு, ஹீரோயின் இனியா, புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தங்கர் எப்படி ஷூட்டிங்கின்போது நடந்து கொள்வர் என்பதை நடித்துக் காட்டி கலாய்த்தனர்.

அதிலும் சாந்தனு, அப்படியே தங்கரைப் போல ஆக்ட் செய்து காட்டியபோது அத்தனை பேராலும் சிரிப்பை அடிக்க முடியவில்லை.. அப்படி ஒரு தத்ரூபம்.

இப்படி காமெடியும் களேபரமுமாககப் போய்க் கொண்டிருந்த ஷோவை, அப்படியே படு உருக்கமாக முடித்தனர்... சாந்தனுவின் அம்மாவாக நடித்த பழம்பெறும் நடிகை ரேவதிதான் அதற்குக் காரணம். படத்தில் இடம் பெறும் ஒரு வசனத்தை அவரிடம் சொல்லச் சொன்னபோது அழுதபடி அவர் பேசிய அந்த வசனத்தைப் பார்த்து நிச்சயம் பார்த்தவர்கள் கண் கலங்கியிருப்பார்கள்.

படத்தின் வீச்சும், கணமும் எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்பதை இந்த ஒரு வசனம் உணர்த்தி விட்டது..சபாஷ் தங்கர்.

பல பிள்ளைகளைப் பெற்று கஷ்டப்படும் ஒவ்வொரு தாய்க்கும் இந்தப் படம் சமர்ப்பணமாக அமையும் என்று நம்பலாம் - அதேசமயம், தாயின் கண்ணீரைப் பார்த்து துடைக்காமல் வேடிக்கை பார்க்கும் பிள்ளைகளுக்கு நிச்சயம் பாடமாக அமையும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X