ஒடுக்குறவங்க ஒடுக்கிக்கிட்டே தான் இருப்பாங்க.. சினேகா, வரலட்சுமி முன்பு எமோஷனலாக பேசிய நடிகர்

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியலில் லீட் ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் ஸ்ரீகுமார். தற்போது சீரியலுக்கு ப்ரேக் கொடுத்து வெள்ளித்திரை பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இந்நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்ற ஸ்ரீகுமார், சினேகா, வரலட்சுமி சரத்குமார், மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் முன்பு இவர் செய்த செயல் ஒன்று பார்வையாளர்களை எமோஷனல் ஆக கனெக்ட் செய்திருக்கிறது.

இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் ஆன ஸ்ரீகுமார் சின்னத்திரையில் சீரியல் நடிகராக லீட் ரோல்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார். அதேபோன்று விக்ரம், தெறி, ஆர்.கே.நகர், அமரன் போன்ற படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் ஸ்ரீகுமார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நான் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். இதனால், சினிமா துறையில் பட்ட அவமானங்களையும், கஷ்டத்தையும் பகிர்ந்திருக்கிறார். இசையமைப்பாளரின் மகனாக இருந்தாலும் எப்போதும் அவர் பெயரை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்பு கேட்டு நின்றதில்லை. ஆனால், என் தந்தை என்னை திட்டுவார்.
கிடைக்க வேண்டிய வாய்ப்பு என் திறமையால் கிடைக்க வேண்டும் என அவரே தெரிவித்திருக்கிறார்.

sreekumar-gifted-a-ring-to-a-contestant-on-zee-tamil-dance-jodi-dance

அப்பாவை விட்டு பிரிந்தேன்: நடிகர் ஸ்ரீகுமார் பல்வேறு சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் வெளியில் சினிமாவிற்கான வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். அப்போது ஸ்ரீகுமாருக்கும் அவரது அப்பாவிற்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்ரீகுமார், அப்பாவிடம் கோபப்பட்டு வந்துவிட்டேன். 6 வருடம் என்னை நானே பார்த்துகொண்டேன். அந்த நேரத்தில் கையில் காசு இல்லாமல் படாத பாடு பட்டிருக்கிறேன். வெளியே யாரிடமும் சொல்ல முடியாத கஷ்டத்தை அனுபவத்திருக்கிறேன். அப்போது பணத்தின் அருமையை புரிந்துகொண்டேன் என எமோஷனலாக ஸ்ரீகுமார் கூறியிருந்தார்.

sreekumar-gifted-a-ring-to-a-contestant-on-zee-tamil-dance-jodi-dance

வாய்தான் பிரச்னை: எங்கே போனாலும் எனக்கு என் வாய்தான் சார் பிரச்னையாக இருந்திருக்கு என ஸ்ரீகுமாரே ஓப்பனாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். பிரபல சினிமா நடிகர் நடத்தி வரும் சாய் சித்ரா லட்சுமணனிடம் அளித்த பேட்டியில், " என் நண்பன் ரஞ்சித் வானத்தைப்போல சீரியலில் நடிக்கும் போது அவன் நடிப்பு அப்படியே விஜய் மாதிரி இருந்தது. இதை பார்த்து பக்கத்தில் இருந்தவர்கள் ஆஹா ஓஹோ என பாராட்டினார்கள். ஆனால், நான் அவனிடம் தனியாக அழைத்து டேய் நீ இப்படி நடிக்காத, அவரே இதெல்லாம் விட்டு அரசியலுக்கு போய்ட்டாரு. நீ இன்னும் அவர் மாதிரி நடிக்கிறது நல்லா இல்லை. உனக்கு என்ன ஸ்டைல் வருதோ அதே மாதிரி பண்ணு சொன்னேன் கேட்கலை. அவன் கேட்கலை விட்டுட முடியாது சார். என் நண்பன் சார் சொல்லாம இருக்க முடியுமா என பேசி கலகலப்பை ஏற்படுத்தினாலும் இது பெரும் சர்ச்சையாக மாறியது.

மோதிரம் பரிசு: தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி பலருக்கும் வெளிச்சத்தை அளித்திருக்கிறது. பலரது கனவுகளை நிறைவேற்றிய மேடையாகவும் உள்ளது. நடுத்தர இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் நிகழ்ச்சியாக டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி இருக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கிய பிரகாஷை பாராட்டுவதற்காக ஸ்ரீகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பிரகாஷை பாராட்டி பேசிய அவர், ரொம்ப எமோஷனலாக பேசி அனைவரையும் கண் கலங்க வைத்தார்.

sreekumar-gifted-a-ring-to-a-contestant-on-zee-tamil-dance-jodi-dance

பிரகாஷை கட்டியணைத்து பாராட்டிய ஸ்ரீகுமார், இங்கே பாருப்பா இந்த வாய்ப்பு மாஸ்டரோ, ஜீ தமிழ் கொடுத்தது என்று நினைக்காதே. உன்னை மாதிரி ஆயிரம் பிரகாஷ் வெளியே இருக்காங்க. அவங்களுக்கான மேடையா நினைத்து பெஸ்டா பண்ணு. நம்மல ஒடுக்குறவங்க ஒடுக்கிக்கிட்டேதான் இருப்பாங்க. அடக்க நினைக்குறவங்க முன்னாடி நாம நிமிர்ந்து வாழனும் என பிரகாஷிடம் தெரிவித்தார். பின்பு தனது கையில் இருந்த மோதிரத்தை கழட்டி பிரகாஷ் என்பவருக்கு பரிசாக அளித்தார். இதை பார்த்து எமோஷனல் ஆன நடுவர்கள் சினேகா, பாபா பாஸ்கர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் எழுந்து நின்று கை தட்டினர். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X