பிக் பாஸில் ஸ்ரீசாந்த்: அவரை அந்த டாஸ்கை மட்டும் செய்யச் சொல்லாதீங்க, மனைவி கோரிக்கை

By Siva

மும்பை: பிக் பாஸ் 12 நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டுள்ளார். அவரின் மனைவி பிக் பாஸிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சல்மான் கான் நடத்தும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் கலந்து கொண்டுள்ளார்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி கோவாவில் நடைபெற்று வருகிறது.

 ஸ்ரீசாந்த்

ஸ்ரீசாந்த்

ஸ்ரீசாந்தை சல்மான் கான் வரவேற்று பேசினார். ஸ்ரீசாந்தை விட்டுச் செல்ல அவருடன் அவர் மனைவி புவனேஸ்வரியும் வந்திருந்தார். புவனேஸ்வரி இருக்கும்போதே சல்மான் கான் ஸ்ரீசாந்திடம் அவரின் காதலிகள் பற்றி கேட்டார். ஸ்ரீசாந்தோ மனைவி இருப்பதால் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்து எஸ்கேப் ஆனார்.

 ஆதரவு

ஆதரவு

பிக் பாஸ் மேடையில் ஸ்ரீசாந்த் தனது மனைவி பற்றி பேசினார். தனக்கும், தன் மனைவிக்கும் இடையே 10 வயது வித்தியாசம் உள்ளது என்றார். மேலும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியபோது அனைவரும் அவரை கைவிட்ட நேரத்தில் மனைவி தான் ஆதரவாக இருந்ததாக ஸ்ரீசாந்த் கூறினார். இதை கேட்ட புவனேஸ்வரி அழ உடனே ஸ்ரீசாந்த் அவரை சமாதானம் செய்தார்.

 கோரிக்கை

கோரிக்கை

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது என் கணவர் எந்த டாஸ்க் செய்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் தயவு செய்து அவரை மொட்டை அடிக்க மட்டும் சொல்லாதீர்கள் என்று கோரிக்கை விடுத்தார் புவனேஸ்வரி. அது ஏன் மொட்டை அடிக்கக் கூடாது என்று பலரும் வியக்கத் துவங்கிய நிலையில் அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

 அறிவுரை

அறிவுரை

ஸ்ரீசாந்தை மொட்டை அடிக்கக் கூடாது என்று அவரின் ஜோதிடர் தெரிவித்துள்ளாராம். ஜோதிடர் ஏதாவது கூறினால் ஸ்ரீசாந்த் மற்றும் அவர் குடும்பத்தார் அப்படியே நடந்து கொள்வார்களாம். சூதாட்ட புகாரில் சிக்கய ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் போராடி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X