எனக்கு அனுமனின் வார்த்தைகள் தன்னம்பிக்கை தந்துள்ளது லட்சுமணா... ஸ்ரீராமர்
சென்னை: சன் டிவியின் ஜெய் அனுமான் சீரியலில் ஸ்ரீராமருக்கே தன்னம்பிக்கை தந்தார் அனுமன் என்று ஒரு காட்சி வருவது பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
சீதை இருக்கும் அசோகவனத்தை கண்டுபிடித்த அனுமன், அங்கு ராவணன் அனுப்பிய எதிரிகளை வென்று நல்ல செய்தியுடன் ராமரை பார்த்து சீதா தேவிவை கண்டேன் பிரபு என்று கூறுகிறான்.
ஸ்ரீ ராமனும், லட்சுமணனும் தேவியை மீட்க போர் ஒன்றே வழி என்று முடிவு செய்கின்றனர்.

வானரன்
அனுமன் சீதையை மீட்க போர் ஒன்றே சிறந்த வழி என்றாகிவிட்டது. ஆனால், லங்கைக்கு செல்ல இடையில் ஒரு சமுத்திரத்தை கடந்தாக வேண்டும். அனுமன் வானரன் என்பதால் இது சாத்தியமானது.

மனித பிறவிகள்
இதோ பாரு அனுமன்.. நானும் லட்சுமணனும் சாதாரண மனித பிறவிகள்...நாங்கள் இருவரும் சமுத்திரத்தைக் கடப்பது என்பது எப்படி சாத்தியமாகும் அனுமன்? இதுதான் என்னை கலக்கத்துக்கு உள்ளாக்கி உள்ளது என்று கூறுகிறார் ஸ்ரீராமர்.

நம்புங்கள்
பிரபு நான் தாயை காண்பதற்குள் எத்தனையோ இடையூறுகளை சந்திக்க நேர்ந்தது. முதன் முறையாக ஒரு அரக்கியை எதிர்கொள்ள ஸ்ரீராமா என்று தங்களின் திருநாமத்தை உச்சரித்தேன். எனக்கு அரக்கியை அழிக்கும் சக்தியை தந்தருளினீர்கள்..எதையும் எதிர்கொண்டு சமாளிக்க எங்களுக்கு தங்களின் திருநாமம் சக்திஅளிக்கும் பிரபு என்று அனுமன் கூறுகிறான்.

அனுமன் நம்பிக்கை
லட்சுமணா போருக்குத் தயாராவோம்...அனுமனின் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை, தன்னம்பிக்கை அளித்துள்ளது. நாம் சூரியன் உச்சிக்கு வரும்போது நமது போருக்கான பயணத்தைத் துவங்குவோம். எந்த பணிகளைத் துவக்குவதாக இருந்தாலும் சூரியன் உச்சிக்கு வரும் வேளையில் துவங்குவது நல்லது என்று ஸ்ரீராமர் கூறுகிறார்.
எல்லாம் சரிதான்... சூரியன் உச்சிக்கு வரம் வேளை என்றால் மணி 12 தானே...


Click it and Unblock the Notifications











