twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சனிபகவானை கண்டு அஞ்சவேண்டாம்... சொல்கிறது ஸ்ரீசனீஸ்வர மகிமை

    By Mayura Akilan
    |

    சென்னை: நவகிரகங்களில் சனி பகவான் என்றாலே மக்களுக்கு அச்சம்தான். அந்த அச்சத்தை போக்கும் வகையில் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘ஸ்ரீசனீஸ்வர மகிமை' நெடுந் தொடர். இந்த தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் 350வது எபிசோடை நோக்கி வெற்றிநடை போடுகிறது.

    நம்பிக்கையுடன் தன்னை சரணடைந்தவர்களின் முற்பிறவி பாவங்களையும், தோஷங்களையும் தீர்க்கும் வல்லமை சனீஸ்வர பகவானுக்கு உண்டு. அதனால் சங்கடங்களைத் தீர்க்கும் சனீஸ்வரனைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை மக்களுக்கு விளக்கமாக எடுத்துச்சொல்கிறது ஸ்ரீசனீஸ்வர மகிமை தொடர்.

    சூரியதேவனுடன் சந்தியாதேவிக்கு திருமணம் முடிகிறது. சூரியன் மீது அளவுகடந்த அன்பு இருந்தாலும், வெம்மையினால் அவரை நெருங்கமுடியாமல் தவிக்கிறார் சந்தியாதேவி. அதனால் கணவரை நெருங்கும் சக்தியை வரமாகப்பெறுவதற்கு கடும் தவம் இயற்ற முடிவு செய்கிறார்.

    குருவான சிவன்

    குருவான சிவன்

    கோபமும் துடிப்பும் நிறைந்த சனிக்கு, சிவபெருமான் குருவாக இருந்து அத்தனை கலைகளையும் கற்றுக்கொடுக்கிறார். மேலும் தன்னுடைய அம்சமாக இருந்து, உயிர்களுக்கு நீதி வழங்கும் மாபெரும் பொறுப்பையும் சனியிடம் ஒப்படைக்கிறார்.

    சிவ அம்சம்

    சிவ அம்சம்

    சிவனின் அம்சமாக நின்று நியாயம் வழங்குவதாலே சனீஸ்வரன் என்று போற்றப்படுகிறார். நியாயஸ்தராக தீர்ப்புவழங்கும் சனி பகவானைக் கண்டு நல்லவர்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை.

    சனீஸ்வர மகிமை

    சனீஸ்வர மகிமை

    தோஷ காலங்களிலும் சனி பகவானை மனப்பூர்வமாக வணங்கி நின்றால், அனைத்து துன்பங்களில் இருந்தும் விமோசனம் பெறலாம். தன்னை உள்ளன்போடும் நம்பிக்கையோடும் வணங்கும் பக்தர்களுக்கு சனீஸ்வர பகவான் நிச்சயம் அருள்புரிவார் என்பதை விளக்குகிறது, ‘ஸ்ரீசனீஸ்வர மகிமை' தொடர்.

    நாரதர் மகிமை

    நாரதர் மகிமை

    நாராயண நாமத்தை சர்வகாலமும் உச்சரிக்கும் நாரதரின் பக்திக்கு ஈடு, இணை கிடையாது. கந்தர்வ குலத்தில் பிறந்து ரிஷியானதால், நாரதரை தேவரிஷி என்று வேதங்கள் கூறுகின்றன. நாரதர் காலங்களைக் கடந்து வாழக்கூடியவர் என்பதால் திரிலோகசஞ்சாரி என்றும் அழைப்பார்கள்.

    வெல்வது யார்?

    வெல்வது யார்?

    அப்படிப்பட்ட நாரதருக்கு தன்னுடைய பக்தியின் காரணமாக அகந்தை உண்டாகிறது. இந்த அகங்காரத்தை விலக்கச் சொல்லும் சனீஸ்வரனுடன் மோதத் தொடங்குகிறார் நாரதர். இந்த போராட்டத்தில் வெல்லப்போவது யார் என்பதை பக்திமயமாக சொல்கிறது ஸ்ரீசனீஸ்வர மகிமை.

    புதுயுகம் டிவியில் ஸ்ரீசனீஸ்வர மகிமை

    புதுயுகம் டிவியில் ஸ்ரீசனீஸ்வர மகிமை

    ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத் தொடர்களைத் தயாரித்து வழங்கிய சாகர் ஆர்ட்ஸ் நிறுவனம், ‘ஸ்ரீசனீஸ்வர மகிமை' தொடரை பிரமாண்டமாக தயாரித்து வழங்குகிறது. புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு, ‘ஸ்ரீசனீஸ்வர மகிமை' ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பு மறுநாள் பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    English summary
    Sri Saneeswara mahimai on Pudhyugam tv weekdays 6.30 PM.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X