ஸ்ரீ சங்கரா டிவி: பஜன் சாம்ராட் சீசன்–2 இறுதிச் சுற்று
ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பஜன் சாம்ராட் சீசன்-2' வின் இறுதிச்சுற்று டிசம்பர் 21 காலை 11 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக இடம் பெறுகிறது.
பெங்களூர், அரண்மனை மைதானத்தில் தொடர்கிற இந்த நிகழ்ச்சி மாலை 4 மணி வரை நேயர்கள் ரசிக்கலாம்.
டிசம்பர் சீசனில் கர்நாடக இசைக்கச்சேரிகள் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகிறது. ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் பஜன் சாம்ராட் 5 மணிநேரம் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

கோவை டூ மங்களூர்
பஜன் சாம்ராட் சீசன்-2 வின் நுழைவு சுற்று கடந்த ஜனவரியில் கோவையில் ஆரம்பித்து, மங்களூரில் நிறைவு பெற்றது.

கால் இறுதிச் சுற்று
இதற்காக 11 இடங்களில் நடைபெற்ற நுழைவு சுற்றுகளில் 24 குழுக்கள் கால் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

12 குழுக்கள்
கால் இறுதிச்சுற்று பெங்களூரில் நடைபெற்றபோது 24 குழுக்களில் இருந்து 12 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவர்களுக்கு இடையிலான விறுவிறுப்பான அரையிறுதிச் சுற்றில் 12 குழுக்களில் இருந்து 8 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இறுதிச்சுற்றில்
இந்த 8 குழுக்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இவர் களுக்கு மத்தியில் இறுதிச்சுற்று போட்டி நடைபெறுகிறது. போட்டியில் வெல்பவர்களை நேரடிச்சுற்றில் கண்டு மகிழலாம்.


Click it and Unblock the Notifications











