ஸ்ரீ சங்கரா டிவியில் குலதெய்வம்… கிராமத்து தெய்வங்கள்
தமிழ்நாட்டில் வாழும் மக்கள் கிராம தேவதைகளையும், கருப்பசாமி, ஐய்யனார், ஆண்டிச்சாமி, முனியாண்டி, என பல காவல் தெய்வங்களை குல தெய்வங்களாக வழிபடுகின்றனர்.
இந்த குல தெய்வங்களை கண்டுபிடித்து அதை காட்சிப்படுத்தி ஒளிபரப்புகிறது ஸ்ரீ சங்கரா டிவி.
'குலதெய்வம்'. ஒவ்வொரு வாரமும் ஒரு குலதெய்வம் பற்றியும், அக்குலதெய்வத்தை ஒட்டி வழிவழியாக சொல்லப்படும் சம்பவங்களும், பல காலங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாகவும் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

குலதெய்வம்
ஒரு குடும்பத்தில் நிலவும் அமைதிக்கும், செல்வ வளத்துக்கும் மற்ற தெய்வ வழிபாட்டுடன், குலதெய்வ வழிபாடு தான் அடிப்படை என்று கூறலாம்.

ஜோதிடர்கள் அறிவுறுத்தல்
பலருடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தில் வழிவழியாக நடந்து வந்த குலதெய்வ வழிபாடு நின்று போனதே என்று பல ஜோதிட சாஸ்திர நிபுணர்களும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆண்டுக்கு ஒருநாள்
இதன் காரணமாகவே ஆண்டுக்கு ஒருநாளாவது குலதெய்வத்தை கண்டு வழிபட்டு வரவேண்டும் என்றும் ஏதாவது தொழில் ஆரம்பிக்கும் போது குலதெய்வத்தை நினைத்து தொடங்கவேண்டும் என்று கூறுகின்றனர்.

குல தெய்வத்தின் அருமை
இது போன்ற காவல் தெய்வங்களின் அருமையை உணர்த்தும் நிகழ்ச்சி குலதெய்வம் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கும், திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கும் ஸ்ரீசங்கரா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் சனிக்கிழமை மதுரையிலுள்ள ஆண்டி வீரன் கோவிலின் தொகுப்பு இடம் பெற்றது.


Click it and Unblock the Notifications











