சிங்கப்பூர் மியூஸியத்தில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை.. பார்த்து உருகி போட்டோ எடுத்துக்கொண்ட மகள்கள்!

மும்பை: சிங்கப்பூர் மியூஸியத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீதேவியின் சிலையை அவரது மகள்கள் ரசித்து பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.

நடிகை ஸ்ரீதேவி 1969ஆம் ஆண்டு வெளியான துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இயக்குநர் பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வர தொடங்கினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமலுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் வெற்றி நடிகையாக வலம் வந்தார்.

துபாயில் மரணம்

துபாயில் மரணம்

நடிகை ஸ்ரீதேவி 300 படங்களில் நடித்துள்ளார். சினிமாத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள அவர் ஏராளமான விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி துபாயில் மரணமடைந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

அவரது மரணம் தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சிலையை பார்த்த குடும்பத்தினர்

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை காட்சிக்கு வைத்துள்ளது. ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை, அவரின் குடும்பத்தினர் இன்று நேரில் சென்று பார்த்தனர்.

போட்டோ எடுத்துக்கொண்ட மகள்கள்

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை அருகில் நின்று நீண்ட நேரம் தொட்டு தொட்டுப் பார்த்து ரசித்தனர். பின்னர் ஸ்ரீதேவியின் மெழுகு சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ட்ரென்ட்

இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் #Sridevi என்ற ஹேஷ்டேகும் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X