சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். பல பாடகர்களை உலகிற்கு அடையாளம் காட்டிய இந்த ரியாலிட்டி ஷோ, தற்போது 8 வது சீசன் நடைபெற்றது. இதில் வெற்றியாளரை தேர்வு செய்வதற்கான போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.

செப்டம்பர் 24 ம் தேதி துவங்கி மொத்தம் 9 மணி நேர நிகழ்ச்சியாக இந்த கிராண்ட் ஃபினாலே நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு துவங்கி, தொடர்ந்து 6 மணி நேர ஷோவாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த போட்டியில் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், எஸ்பிபி சரண் ஆகியோர் இருந்துனர்.

Sridhar Sena won super singer season 8 title

மொத்தம் 20 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதி போட்டியாளர்களாக அபிலாஷ், பரத், அனு, முத்து சிப்பி, ஸ்ரீதர் சேனா, மானசி ஆகியோர் தேர்வாகினர். ரசிகர்கள் அளிக்கும் ஓட்டுக்களின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான சிவாங்கி, புகழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மகாபா.,வும் பிரியங்காவும் தொகுத்து வழங்கினர்.

இந்த போட்டியின் சிறப்பு விருந்தினராக ஹிப் ஹாப் தமிழா ஆதி நேற்று கலந்து கொண்டார். இந்நிலையில் இன்றைய இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டார். கையில் வாளுடன் என்ட்ரி கொடுத்த அவர், மாஸ்டர் படத்தில் மாஸ் ஹிட்டான பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார்.

இவர்கள் தவிர பிரபல இசை பாடகர்களான சித்ரா, மால்குடி சுபா, அனந்த் வைத்தியநாதன், கல்பனா, தீ, சந்தோஷ் நாராயணன், ஹரிஷ் கல்யாண், செஃப் தாமு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து 6 மணி நேரம் இந்நிகழ்ச்சி நடைபெறுவதால் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X