நச்சுனு மெலிந்து.. சிக்குனு மாறிய ஸ்ரீதிகா.. அது மட்டும் அப்படியேதான் இருக்கு!
சென்னை : சும்மாவே ரொம்ப க்யூட்டாகத்தான் இருப்பார் ஸ்ரீதிகா. ஆனால் தற்போது நன்றாக மெலிந்து ரொம்ப ரொம்ப க்யூட்டாகி விட்டார்.
கையை தூக்கி தலையில் இருக்கும் தொப்பியை பிடித்த ஸ்ரீதிகாவை வஞ்சகமில்லாமல் வர்ணித்து தள்ளுகிறார்கள் ரசிகர்கள்.
கலக்கலாக மாறியுள்ள ஸ்ரீதிகாவுக்கு குரல் வளம் சூப்பராக இருக்கும். நல்ல பாடகியும் கூட. அந்தக் குரல்தான் அவரது இன்னொரு முகமாகவும் இருக்கிறது.

கருப்பில் கலக்கல்
பெரிய தொப்பியை தலையில் மாட்டி சைட் பார்வையால் ரசிகர்களின் கற்பனை திறனை தட்டி எழுப்பியிருக்கும் ஸ்ரீதிகாவை பார்த்ததும் முகத்தை தவிர நாங்க வேற எதையும் பார்க்கலங்கனு என வாண்டடாக அட்டெண்டன்ஸ் போட்டு வருகிறார்கள். பால்வண்ண மேனியில் கருப்பு கலர் உடையில் கலக்கலாக கலக்கி இருக்கும் இவருக்கு ரசிகர்களின் சப்போர்ட் அதிகரித்து வருகிறது.

இப்படி பண்ணிட்டீங்களே
என்ன தான் இவரை ரசிகர்கள் வர்ணித்தாலும் வெள்ளித் திரையின் மீது அதிகமாக கோவம் இருக்கிறதாம். இவ்வளவு அழகான தேவதையை எப்படி இந்த தமிழ் சினிமா கதாநாயகியாக களம் இறக்காமல் விட்டு விட்டது என்று தான் பலர் புலம்பி வருகின்றனர் .இவரைப் போய் தங்கச்சி ஆகவும் தோழியாகவும் காட்டிட்டாங்களேனு சிலர் மனம் நொந்துபோய் கேள்வி கேட்டு வருகின்றனர்.

வாசம் வீசும் மலர்
இவர் எத்தனை சீரியல்களில் நடித்து இருந்தாலும் நாதஸ்வரம் மலர் கேரக்டரை அடிச்சிக்கவே முடியாது .இந்த சீரியல் மூலமாகவே இவர் சின்னத்திரையில் கதாநாயகியாகவும் இளவரசியாக வலம் வந்தார். பொதுவா சீரியல் என்றாலே வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்த அவர்கள் அங்கு வாய்ப்பு குறைந்ததும் சீரியலில் கதாநாயகியாக வலம் வரத் தொடங்குவார்கள் .ஆனால் இவர் அறிமுகமானதே இளம் கதாநாயகியாக சீரியலில் ரெக்கை கட்டி பறந்து வந்தார்.

மனசுக்கு புடிச்ச நாதஸ்வரம்
பல சீரியல்களிலும் 40 வயசுக்கு மேல உள்ள நடிகைகள் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இவரை நாதஸ்வரம் மலராக பார்த்ததும் பலருக்கும் பிடித்துவிட்டது. அதனால் இந்த சீரியலை தொடர்ந்து கடைசி வரைக்கும் பார்த்து வந்தனர். இந்த சீரியல் முடிவடைந்ததும் கூட ஒரு சில நாட்களுக்கு இந்த சீரியல் ஒளிபரப்பும் நேரத்தில் அவர்களை அறியாமலேயே சீரியலை தேட ஆரம்பித்து விட்டனர் .அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார்.
Recommended Video

சூப்பர் மாடல்
திருமணத்திற்குப் பிறகு நடிப்பை விட்டு இருந்த இவர் தற்போது மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் .சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் மாடலாகவும் கலக்கி வருகிறார் .இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தான் எடுக்கும் போட்டோக்களை இதில் போஸ்ட் போட்டு வருகிறார். திருமணத்திற்கு முன்பு புசுபுசுவென இருந்த இவர் தற்போது ஸ்லிம்மாக சிக்குன்னு மாறிவிட்டார்.

மாஸ் லுக்
இவர் இதுவரைக்கும் மாடல் உடை புடவை என பல விதவிதமான போட்டோக்களை எடுத்து இருந்தாலும் தற்போது கருப்பு கலர் மாடர்ன் உடையில் தலையில் கருப்பு தொப்பியையும் முகத்தில் கருப்பு கண்ணாடியையும் போட்டுக்கொண்டு கருப்பு நெருப்பு டா ன்னு சொல்ற மாதிரி செம மாஸ் பர்பாமன்ஸ் பண்ணியிருக்கிறார் .இந்த இந்த போட்டோ தான் தற்போது இன்ஸ்டாகிராம் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











