Eeramana Rojaave Serial: காலம் காலமா மல்லிப்பூ அல்வாவுக்கு மகத்துவம் 'அப்படி'யாமே!

சென்னை: விஜய்டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் தினம் தினம் முதலிரவுக்கான முயற்சியில் சற்றும் மனம் தளராமல் இருக்கான் வெற்றி. இந்த மலர்தான் ஒன்னும் புடி கொடுக்கலை. நொந்து போயி, உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமேன்னு விரக்தியா பாடிகிட்டு வர்றான்.

இதை பார்த்த அப்பச்சி, என்னடா வெற்றி இப்படி ஒரு பாட்டை பாடிக்கிட்டு வர்றானே.. அவங்களுக்குள்ள ஒண்ணும் நடக்கலியான்னு யோசிக்கறார். வெற்றியை கூப்பிட்டு கேட்டும் விடுகிறார். ஒன்னும் வேலைக்கு ஆகலை அப்பச்சி.. அவளுக்கு இது பத்தி தெரியுமா தெரியாதான்னே எனக்கு புரியலை அப்பச்சின்னு சொல்றான்.

மல்லிப்பூ அல்வா வாங்கிட்டு போனியான்னு கேட்கறார் அப்பச்சி. அது பழைய காலம் அப்பச்சி.. இப்போ வொர்கவுட் ஆகாதுன்னு சொல்றன் வெற்றி. ஏய்.. எப்பவுமே மல்லிப்பூ அல்வாவுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்குது. நீ முதலில் வாங்கிட்டு போன்னு சொல்றார் அப்பச்சி.

மல்லிப்பூ அல்வா

மல்லிப்பூ அல்வா

ஆசையா மல்லிப்பூவும், அல்வாவும் வாங்கிட்டு வர்றான் வெற்றி. அதுக்குள்ளே மலர் படுக்கப் போக, என்ன மலர் பன்றேன்னு கேட்கிறான். படுத்து தூங்கப் போறேன் மாமான்னு மலர் சொல்ல, இந்த நேரத்துல தூக்கமான்னு பதறுகிறான் வெற்றி. மாமா என்ன மாமா இப்படி கேட்டுட்டீங்க.. மணி பாருங்க 10 ஆகப் போகுதுன்னு சொல்றா மலர். அதிருக்கட்டும் மலர் நான் மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்து இருக்கேன்னு மலர்கிட்டே பின்னாடி மறைச்சு வச்சு இருந்த மல்லிப்பூவையும் அல்வாவையும் காட்டறான்.

ரொம்ப பிடிக்கும் மாமா

ரொம்ப பிடிக்கும் மாமா

ஐ.. எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமான்னு அல்வாவை பிடுங்கி தானே சாப்பிடறா. மலர் மல்லிப்பூ வாங்கிட்டு வந்து இருக்கேன். நானே வச்சு விடவான்னு கேட்கறான். என்ன மாமா இது கேள்வி.. எனக்குத்தானே வாங்கிட்டு வந்தீங்க.. வச்சு விடுங்க மாமான்னு எழுந்து அவனுக்கு முதுகை காண்பித்து நிக்கறா. இவனும் சரி.. இவளுக்கும் மூட் வந்து இருக்கும் போலன்னு ஆசையா வச்சு விடறான்.

அல்வாவை மறுபடியும்

அல்வாவை மறுபடியும்

மறுபடியும் அல்வாவை லபக் லபக் என்று சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் மலரிடம், இனிமே சுத்தி வளைச்சு பேசினால் வேலைக்கு ஆகாது. நேரடியா கேட்டுடுவோம்னு.. ஏன் மலர் உனக்கு ஃபர்ஸ்ட் நைட்னா என்னன்னு தெரியுமான்னு கேட்கறான். போங்க மாமா எனக்கு வெட்கமா இருக்குன்னு இவள் சொல்ல, இவளை நம்ப முடியாதுன்னு என்னை நீ எவ்வளவு கேவலமா நினைச்சாலும் சரி... நான் கேட்டதுக்கு பதில் சொல்லுன்னு சொல்றான்.

தூறல் நின்னு போச்சு

தூறல் நின்னு போச்சு

கே. பாக்யராஜ் இயக்கத்தில் அவர் நடிச்சு வெளியான தூறல் நின்னு போச்சு படத்தில் சுலக்ஷனா முதலிரவு பத்தி சொல்ற மாதிரி, பாலை குடிப்பாங்க.. ஸ்வீட் சாப்பிடுவாங்க.. அப்புறம் ரெண்டு குருவி மூக்கை உரசிக்கும். அப்பறம் லைட்டை அணைச்சுருவாங்கன்னு சொல்ற மாதிரி மலரும் சொல்லி. லைட்டை அணைச்சுருவாங்க.. அப்புறம் விடிஞ்சுரும் மாமா.. ஃ பர்ஸ்ட் நைட் முடிஞ்சுரு மாமான்னு சொல்றா.

 சட்டு புட்டுன்னு முதலிரவை

சட்டு புட்டுன்னு முதலிரவை

ஆனால், இதே மலர் தங்கச்சி அகிலாவிடம், அவர் தினமும் மூக்கை தொட்டு காதைத் தொட்டுன்னு இந்த விஷயத்துக்குத்தான் சுத்தி வளைச்சு வர்றார். ஆனா, நான்தான் எதாவது சொல்லி சமாளிச்சுகிட்டு இருக்கேன்னு சொல்றா. என்ன புள்ளே ஐ லவ் யூ சொல்லிகிட்டீங்க, கட்டிப் பிடிச்சுகிட்டீங்க.. அப்புறம் என்ன மலர்.. சட்டு புட்டுன்னு முதலிரவை முடிச்சுட்டு. புள்ளை குட்டியை பெத்து படிக்க வைக்கற வேலையை பார்ப்பீங்களான்னு சொல்றா அகிலா.

உண்மையில் அதை காண்பிக்க இப்படியே போனால் இன்னும் ஒரு வருஷம் ஆகுமோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X