Aranmanai kili serial: இந்த காலத்தில் இப்படியும் பொண்ணுங்களை கஷ்டப்படுத்துவீங்களா?

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் கணவனை எழுந்து நடக்க வைக்க மனைவி போராடும் போராட்டம் இருக்கிறதே...

ஒரு விபத்தில் அர்ஜூனால் எழுந்து நடக்க முடியாதபடி வீல் சேர் வாழ்க்கை என்று மாறிவிடுகிறது. பெரும் தொழிலதிபர் மீனாட்சி அம்மாவின் ஒரே மகன்தான் அர்ஜுன். அர்ஜுனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு செய்யறாங்க.

முதலில் அர்ஜுனுக்கு படிச்ச பொண்ணா வேணும்னு மீனாட்சி அம்மா தோட்டத்தில் வேலை செய்யும் ஜானுவின் அக்கா ரேணுவைத்தான் பேசி முடிக்கிறார்கள்.

ஜானுதான் மனைவி

ஜானுதான் மனைவி

ரேணுவுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை. இதைவிட ஒரு கொடுமை என்னன்னா கால் நடக்க முடியாத அர்ஜுனை கல்யாணம் செய்துக்க கூடாதுன்னே ரேணுகாவுக்கு எதிரா மீனாட்சி அம்மா வீட்டுக்குள்ளேயே துர்கா சதி பண்றா. ரேணு ஓடிப் போய்விட தங்கச்சி ஜானுவை பிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுடறாங்க.

பாவம் ஜானு

பாவம் ஜானு

ஜானுவை அர்ஜூனுக்குப் பிடிக்கலை, மீனாட்சி அம்மாவுக்குப் பிடிக்கலை.காரணம் ஜானு அவ்வளவா படிக்கலியாம். இத்தனை நாள் வேலைக்காரி மாதிரி அந்த வீட்டில் கஷ்டப்பட்டு, ஒரு வழியா அர்ஜுன் மனதில் இடம் பிடிச்சுட்டா. இருந்தாலும் டைவர்ஸுக்கு அப்ளை பண்ணி இருக்காங்க. எப்படியாவது தன் புருஷன் காலை சரி செய்து, அவனை நடக்க வச்சு பார்க்கணும்னு போற இடத்தில் எல்லாம் வேண்டுதல்.

மூலிகை வைத்தியம்

மூலிகை வைத்தியம்

இப்போது மலை மேல உள்ள ஒரு ஆஸ்ரமத்தை தேடி, அங்கு இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு வைத்தியம் செய்வதாக அறிந்து புருஷனை இங்கே அழைச்சுட்டு வர்றா ஜானு. இதை மோப்பம் பிடித்து, கெடுப்பதற்கு என்றே அங்கே வருகிறாள் துர்கா. ஒரு வழியாக வைத்தியர் இந்த மூலிகை மருந்தை தடவினால், ஒரு வாரத்தில் கால் சரியாகி எழுந்து நடக்க ஆரம்பிச்சுருவார்னு சொல்லி பூஜையில் வச்சு கொடுக்கிறார்.அதில் வச்சிருக்கும் நாகலிங்கப் பூவில் பூ நாகத்தை வச்சு,, ஜானுவை கொத்தும்படி செய்துடறா துர்கா.

ஏழு மலை

ஏழு மலை

இனி வைத்தியம் பார்க்க மாட்டேன்னு சொன்ன வைத்தியரிடம் அடம் பிடிச்சு மீண்டும் வைத்தியம் பார்க்க ஜானு சொல்ல, வைத்தியரும் ஒத்துக்கறார். ஆனா, அந்த மூலிகை அரிய வகை மூலிகையும். அதை கொண்டு வர ஆட்கள் கிடையாதாம். அதானால், பொண்டாட்டி அல்லது அம்மாதான் இந்த மூலிகையை கொண்டு வர முடியுமாம். அதோட, அந்த மூலிகையை கொண்டு வர இந்த மலையயைத் தாண்டி ஆலங்கட்டி மலைன்னு ஒரு மலை இருக்குமாம். அந்த மலைக்கு போயி ஏதோ ஒரு கல்லை எடுத்தால் அது அந்த மூலிகையை காட்டிக் கொடுக்குமாம்.

 என்ன ஒரு அவல நிலை!.

என்ன ஒரு அவல நிலை!.

பின்னர் அதை பறிச்சுக்கிட்டு, பத்திரமா மறுபடியும் அந்த மலையை கடந்து, இந்த மலைக்கு வரணுமாம். ஜானுவும் நான் போறேன் போறேன்னு குதிக்கறா... எந்த காலத்துலடா இருக்கீங்க எல்லாரும். ஒரு பொண்ணை இப்படியா கஷ்டப்படுத்துவீங்க? கதை பஞ்சம் இப்படியா தலை விரித்தாடுது? என்ன ஒரு அவல நிலை!.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X