எனக்கு கிரிக்கெட் பிடிக்காது.. ஏன் தெரியுமா.. கமல் அடித்த பிக் ஷாட்!
கிரிக்கெட் பார்ப்பது கிடையாது என கமல் பேச்சு
சென்னை: கிரிக்கெட் பற்றியெல்லாம் நேற்று கமல் பிக்பாசில் பேசினாரு.
போன வாரம் முழுக்க ஐஸ்வர்யாவை வைத்து அராஜக ஆட்டம் போட்டு, தமிழக மக்களின் மண்டைய காயவெச்சதுக்காக கமல் எப்படியோ வந்து அவரை செமயாக கவனிக்க போறார்ன்னு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

அப்போது போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகள் தந்தார். சிலரை கடிந்து கொண்டதுடன் அவருக்கே உரிய பாணியில் இடித்துரைத்தார். சிலரை ஒப்புக்கு திட்டவும் செய்தார். சில இடங்களில் ஜாலிக்குள்ளும் இறங்கிவிட்டார் கமல். அப்போது பேசும்போது கிரிக்கெட் போன்ற சமாச்சாரங்களை தன் பேச்சின் உள்ளே கொண்டு வந்தார்.
"எனக்கு கவாஸ்கர்-ன்னா ரொம்ப பிடிக்கும். அவர்தான் எனக்கு ஹீரோ மாதிரி. ஆனால் கிரிக்கெட் தன்னை வேறு எங்கோ இழுத்து செல்வதாக உணர்ந்தேன். அதனால்தான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்றார். எப்போதும் கிரிக்கெட்பற்றி பெரிதாக பேச காரணம், அதன் மூலம் எளிதாக திசை திருப்ப முடியும் என்பதே" என்று கூறினார்.
பொழுதுபோக்குகள் மூலம் மக்களின் கவனம் திட்டமிட்டு திசை திருப்பப்படும் என்றும் கமல் கூறுகிறார். அப்படின்னா பிக்பாஸ் நிகழ்ச்சியை எதுல சேர்க்கிறது மிஸ்டர் கமல்?


Click it and Unblock the Notifications











