twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாகினி செட்டில் இயக்குனருடன் நடிகை சுதா சந்திரன் மோதல்: ஷூட்டிங் நிறுத்தம்

    By Siva
    |

    மும்பை: நாகினி 2 தொலைக்காட்சி தொடரின் இயக்குனருக்கும், நடிகை சுதா சந்திரனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    இந்தி தொலைக்காட்சி தொடரான நாகினி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் ரசிகர்களுக்கும் நாகினி தொடர் மிகவும் பிடித்துவிட்டது.

    நாகினி தொடரின் இரண்டாவது சீசன் துவங்கிவிட்டது.

    மோதல்

    மோதல்

    நாகினி 2 காட்சிகள் படமாக்கப்பட்டபோது இயக்குனர் குஷால் ஜவேரிக்கும் நடிகை சுதா சந்திரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு 4 மணிநேரம் நிறுத்தப்பட்டது.

    ஸ்கிரிப்ட்

    ஸ்கிரிப்ட்

    ஷூட்டிங்ஸ்பாட்டில் சுதா கையில் ஸ்கிரிப்ட் வைத்திருப்பது குஷாலுக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக அவர் சுதாவிடம் கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதமாகிப் போய்விட்டது.

    பீர் பாட்டிலா?

    பீர் பாட்டிலா?

    ஷூட்டிங்ஸ்பாட்டில் கையில் ஸ்கிரிப்டை வைக்காமல் பீர் பாட்டிலையா வைத்திருப்பார்கள். செட்டில் செல்போனும் கையுமாக இருந்தால் குறை கூறலாம். நானோ செட்டில் செல்போனையே தொட மாட்டேன் என சுதா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    கோபம்

    கோபம்

    நான் ஷூட்டிங்கிற்கு முன்பு ஸ்கிரிப்டை படித்துவிட்டு வருவதில்லை என்கிறார் இயக்குனர். ஒரே பார்வையில் எப்படி அனைத்தையும் மனப்பாடம் செய்ய முடியும் என சுதா கூறியுள்ளார்.

    சமாதானம்

    சமாதானம்

    குஷாலுக்கும், சுதாவுக்கும் இடையேயான சண்டையை பார்த்த பாலாஜி டெலிபிலிம்ஸ் அதிகாரிகள் வந்து அவர்களை சமாதானம் செய்தனர். தனது காட்சிகளை முடித்த பிறகு சுதா வேனுக்கு சென்று உட்கார்ந்து கொண்டார்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    இயக்குனர் குஷால் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் சுதா. ஆனால் குஷாலோ தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இந்த சம்பவத்தால் சுதா தொடரில் இருந்து விலக மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Popular actress Sudha Chandran was in a shock when Naagin 2 director Kushal Zaveri had problem with the actress holding the script on the set! The duo had a major showdown and the shoot apparently, came to a halt for nearly four hours.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X