Azhagu serial: வீட்டில் இருக்கும் பூர்ணாவை விட்டுட்டு போலீஸ்கிட்டே போறா சுதா...!

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் வீட்டில் இருக்கும் பூர்ணாதான் ரவி காணாமல் போனதுக்கு காரணம்னு தெரிஞ்சும், சுதா போலீஸ்கிட்டே போறதும், ஃபைலுக்கு சொந்தக்காரன்கிட்டேயே போயி ஃ பைல் எங்கடான்னு கேட்கறதும்...சகிக்கலை.

புருஷனை விட இப்படியா தங்கச்சி பாசம் இருக்கும்...அதுவும் தங்கச்சி பூர்ணா தன் வாழ்க்கையை கெடுக்க வந்தவன்னு தெரிஞ்சும் அவளை ஒன்னும் செய்யாம நானே என் புருஷனைத் தேடி அலைவேன்னு சொல்லி கிளம்பறதும் வேடிக்கையா இருக்கு.

சுத்தி வளைச்சு கதையை எங்கே ஆரம்பிக்கறது.. எப்படி கொண்டு போறதுன்னு ஒன்னுமே தெரியாம அன்றைய ரேட்டிங், விறுவிறுப்பு இதை மட்டுமே வச்சு கதையை நகர்த்தினா தலையும் புரியாது, வாலும் தெரியாது என்று அழகு சீரியல் நிலைமை ஆகப் போகுது.

அழுக்கு சீரியல் அழுகை சீரியல்

அழுக்கு சீரியல் அழுகை சீரியல்

பூர்ணாவை விசாரிச்சால் உண்மை தெரிஞ்சுரும்னு இருக்கையில், பூர்ணா உட்கார்ந்து அழறதும், வீம்பா கிளம்பறதும் நல்லா இல்லை என்று புலம்பும் சீரியல் ஆர்வலர்கள், என்னடா அழகு சீரியல், அழுகை சீரியல், அழுக்கு சீரியல்னு பேர் வைங்கடா என்று திட்டி புலம்பி வருகிறார்கள். அதோடு கடுப்பில் உச்சத்துக்கு போயி, இந்த நாடகத்தை முதலில் நிறுத்துங்கடா வாயில நல்லா வந்துரும்னு கமெண்ட் போடறாங்க.

சுதா அழுகை

சுதா அழுகை

அழகு சீரியலுக்கு அழகம்மை இல்லாம சீரியலை கொண்டு போறீங்க. அப்புறம் எதுக்கு அழகுன்னு வச்சு இருக்கீங்க. சுதா அழுகைன்னு பேர் வைங்கன்னு சில பேர் ஆலோசனை தந்தும் வருகிறார்கள். இப்படி ஸ்டார் காஸ்ட் சீரியலா இருந்தும் அழகம்மை முடிவும் எடுபட மாட்டேங்குது. காயத்ரி ஜெயராம் முடிவும் ஈடுபட மாட்டேங்குது. அப்புறம் எதுக்கு இந்த ரெண்டு ஸ்டாரை வச்சு அழகு சீரியல்னு மக்களை ஏமாத்தணும்?

தர்மம் நியாயம்

தர்மம் நியாயம்

என்னங்க ரேவதியை கண்ணுல காமிச்சு காமிச்சு விலகிப் போக நினைக்கும் சீரியல் ஆர்வலர்களை மறுபடியும் பார்க்க வச்சு, மறுபடியும் ரேவதியை அனுப்பி வச்சுடறீங்க. கொஞ்சமாவது பார்வையாளர்களை ஏமாற்றுகிறோமே என்கிற நியாயம் தர்மம் வேணாமா? என்ன கதை அழகுன்னு சொல்லித் தொலைங்கடா அழகு சீரியல் டீம்னு உச்சஸ்தாயியில் கத்தி கமெண்ட் போடறாங்களே அவங்களுக்கு என்னதான் மதிப்பு?

அழகு குற்றம் குறை

அழகு குற்றம் குறை

நடிகை ரேவதி அம்மா கேரக்டரில் அழகம்மையாக வருகிறார். இவர் சீரியலில் அன்றாடம் எப்போதும் போல வந்து போனால் கூட சீரியல் ஆர்வலர்கள் இவ்வளவு கடுப்பாக மாட்டார்கள். எதாவது சீன் பிடிக்கலை என்றால் கூட ரேவதி இல்லை, காயத்ரி ஜெயராம் இல்லை.. எதுக்கு இப்படி கொண்டு போறீங்க.. மொத்தத்தில் அழகு சீரியலில் கதையே இல்லைன்னு கூட கமெண்ட் போட்டு வருகிறார்கள். ரேவதியை வழக்கமாக கொண்டு வந்து இறக்குங்கள்..சீரியல் குற்றம் குறை காணாமல் போகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X