ஜீ தமிழில் சுஜிதா நடிக்கும் ஒரு கை ஓசை

By Mayura Akilan

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் 20ம் தேதி முதல் ஒரு கை ஓசை என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த தொடரில் சின்னத்திரை நாயகி சுஜிதா கதாநாயகியாக நடிகின்றார்.ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக இவர் நடிக்கும் முதல் தொடர் இது.

இவர் சன் டிவியில் கணவருக்காக, மருதாணி, கலைஞர் டிவியில் விளக்கு வச்ச நேரத்தில்ல, மைதிலி, போன்ற பல வெற்றி தொடர்களில் நடித்திருக்கிறார்.

ஒரு பெண்ணின் போராட்டம்

ஒரு பெண்ணின் போராட்டம்

வசந்தி என்ற கதாபாத்திரம் மூலம் ஒரு கை ஓசை தொடரில் நடிக்கிறார் சுஜிதா. இந்த தொடர் பெண்களின் வாழ்உரிமைக்காக போராடும் தொடர் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

மூன்று குழந்தைகளின் தாய்

மூன்று குழந்தைகளின் தாய்

வசந்தியின் கணவர் பாலு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு நிகிதா,நவ்யா,நவீன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

காணாமல் போன கணவன்

காணாமல் போன கணவன்

சந்தோஷமும், கொண்டாட்டமுமாய் நகரும் வசந்தியின் குடும்ப வாழ்க்கை இடிதாக்குகிறது. ஒருநாள் பாலு காணாமல் போகிறான்.

பெண்ணின் போராட்டம்

பெண்ணின் போராட்டம்

கணவனின் பிரிவுக்குப் பின்னால் தனி ஒரு பெண்ணாக நின்று குழந்தைகளை வசந்தி எப்படி வளர்க்கிறாள் அதற்காக அவள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என்னென்ன என்பதுதான் தொடரின் கருவாக இருக்கிறது என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

ஜீ தமிழ் டிவியில்

ஜீ தமிழ் டிவியில்

ஒரு கை ஓசை தொடர் வரும் 20ம் தேதி முதல் ஜீ தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X