சைந்தவியை திட்டுவேன்: ஜி.வி.பிரகாஷ் குமார்

By Mayura Akilan

G V Prakash Kumar
காதலியாக இருந்தாலும் சைந்தவி பாடும் போது தவறு செய்தால் கண்டிப்பாக திட்டுவேன் என்று அவரது காதலரும், இசை அமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சன் மியூசிக் புத்தம் புது பொலிவுடன் புதிய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. ஞாயிறு இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஸ்டார் கவுண்டவுன் நிகழ்ச்சியில் முதல் சிறப்பு விருந்தினராக ஜி.வி பிரகாஷ்குமார் பங்கேற்றார்.

கிரீடம் தொடங்கி தாண்டவம் வரை 25 படங்களுக்கு இசை அமைத்த அனுபவங்கள். சைந்தவியுடனான காதல், பிடித்த இசை அமைப்பாளர் என தன்னுடைய ஆசைகளை பகிர்ந்து கொண்டார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

சைந்தவியை காதலித்தாலும் வேலை என்று வந்தால் தான் இசைஅமைப்பாளராகத்தான் நடந்து கொள்வேன் என்றார் பிரகாஷ். பாடும்போது தவறு செய்தால் கண்டிப்பாக திட்டுவேன் என்றும் அவர் கூறினார். தான் இசை அமைப்பாளராக இருந்தாலும் தனக்கு பிடித்தது 'வாகை சூடாவா' படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரானின் இசை பிடிக்கும் என்று கூறினார். பின்னர் தனது 25 படமான தாண்டவம் பற்றி பேச்சு எழுந்தது. அந்த படத்தில் இருந்து அழகான ஒரு பாடலை உருகும் குரலில் ஜி.வி. பிரகாஷ் பாடினார்.

விறுவிறுப்பான, சுவையான கேள்விகளுக்கு புன்னகை மாறாமல் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்குமார். தனக்குப் பிடித்த உணவு பிரியாணி என்று கூறினார். இதுவரை அனைத்து வகையான பிரியாணியையும் ருசித்திருப்பதாக சொன்னார் பிரகாஷ்

பிடித்த நடிகர் கார்த்தி, விக்ரம், தனுஷ், என்று கூறிய அவர் பிடித்த இயக்குநர் வசந்தபாலன், ஏ.எல்.விஜய், வெற்றிமாறன் என்றும் கூறினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள்தான் என்று சரியாக சமாளித்தார். நான் ஹீரோவாக நடித்தால் எனக்கு பாலிவுட் நடிகைகள்தான் ஜோடியாக நடிக்கவேண்டும் என்று எஸ்கேப் பதிலை கூறிவிட்டு விடை பெற்றார் ஜி.வி. பிரகாஷ்குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X