twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மாடர்ன்' டிரஸ்ஸுக்கு மாறிய சன் நியூஸ் ரீடர்கள்!

    By Sudha
    |

    Sun news reader
    சன் நியூஸ் சானலின் பெண் செய்தி வாசிப்பாளர்கள் மாடர்ன் உடைக்கு மாறியுள்ளனர். இதுவரை புடவையில் மட்டுமே வலம் வந்த அவர்கள் தற்போது மாடர்ன் டிரஸ்ஸுக்கு மாறி விட்டனர்.

    ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் விதம் விதமான மேக்கப்புடன், விதம் விதமான உடைகளில் கண்ணைக் கவரும் வகையில் செய்தி வாசிப்பாளர்களைக் காணலாம். இருப்பினும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பெரும்பாலும் தெய்வீகத் தேவதைகளாக காட்சி தந்து வந்தனர்.

    தமிழக மக்களுக்கு மாடர்ன் கலாச்சாரம் பொருந்தாது என்பதாலும், நம் பெண்களுக்கு அழகே புடவைதான் என்பதாலும், புடவையில் வரும்போதுதான் கம்பீரமும், கண்ணியமும் தூக்கலாக தெரியும் என்பதாலும் புடவையிலேயே வநது செய்தி வாசித்து வந்தனர் தமிழ் சேனல்களின் பெண் செய்தி வாசி்ப்பாளர்கள்.

    இருப்பினும் விஜய் டிவி முன்பு இந்த பாரம்பரியத்தை உடைத்தது. சமீபத்தில் புதிய தலைமுறை புதிய கோணத்தில் தனது பெண் செய்தி வாசிப்பாளர்களை காட்ட ஆரம்பித்தது.

    இந்த நிலையில் நீண்ட காலமாக புடவையிலேயே செய்தி வாசித்து வந்த சன் டிவியிலும் இப்போது ஒரு புது மாற்றம். சன் நியூஸ் சானலில் கடந்த சில நாட்களாக பெண் செய்தி வாசிப்பாளர்கள் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்க ஆரம்பித்துள்ளனர்.

    இதுவரை புடவையில் பார்தது வந்த பெண் செய்தி வாசிப்பாளர்கள இப்போது மாடர்ன் டிரஸ்ஸில் பார்ப்பது நேயர்களுக்கு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது.

    சேலையை மாற்றிய கையோடு இன்னொன்றையும் செய்தி வாசிப்பாளர்கள் மாற்றினால் நன்றாக இருக்குமே என்பது நேயர்களின் கோரிக்கை - அதாவது செய்திவாசிப்பாளர்களின் உச்சரிப்பும், செய்தியை கூறும்போது மாறும் முகபாவமும் அவசியம். புடவையோ, நாகரீக உடையோ செய்திவாசிப்பாளர்களின் முக பாவம் முக்கியம். எந்த செய்தியானாலும் ஒரே சோக கீதம் பாடுகின்றனர் செய்திவாசிப்பாளர்கள். அதையும் கொஞ்சம் கவனித்தால் நல்லது அப்பொழுதுதான் சேனலை மாற்றாமல் செய்தியை கொஞ்சம் கேட்பார்கள் என்கின்றனர் நேயர்கள்.

    நேயர் விருப்பத்தை நிறைவேற்றப் பாருங்கப்பா...

    English summary
    Sun news women news readers have change into modern dresses. They have deserted sarees and shifted to modern dresses like churidhars.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X