குணசேகரனை நினைத்து கவலைப்படும் விசாலாட்சி… எதிர்நீச்சல் 2 இன்றைய எபிசோடு!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகி வந்தது எதிர்நீச்சல். இந்த சீரியல் அண்மையில் முடிவடைந்ததை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் 2 திங்கட்கிழமை முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
எதிர்நீச்சல் 2 ஆறு மாசத்துக்கு பிறகு தொடங்கப்பட்டாலும் ,புது சீரியலாக இல்லாமல், பழைய கதையின் உடைய தொடர்ச்சியாகவே இருந்தது. குணசேகரன் கைது செய்யப்பட்ட பிறகு அவர் எப்படி வெளியே கொண்டு வருகிறார்கள் என்பதை குறித்து கதை ஆரம்பமாகிறது. அதாவது குணசேகரன் ஜெயிலுக்கு போனதால், விசாலாட்சி மற்றும் அவரது தம்பிகள் பரிதவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தான் கதிர் மற்றும் ஞானமும் பொண்டாட்டிகளின் பேச்சை கேட்டு திருந்திவிட்டாலும், அண்ணனின் நிலையைப்பார்த்து அவர் மீது பாசத்தை கொட்ட ஆரம்பிக்கிறார்கள்.

எதிர்நீச்சல் 2: ஒரு பக்கம் குணசேகரனை நினைத்து விசாலாட்சி மற்றும் அவரது குடும்பத்தினர் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, அவரை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்றால், இந்த குடும்பத்தில் திருமணம் நடக்க வேண்டும் இல்லை என்றால், யாராவது ஒருவர் சாக வேண்டும் என்று குணசேகரன் தம்பி சொல்ல, விசாலாட்சி நெஞ்சு வலி வந்தது போல நடிக்கிறாள். அம்மாவின் நிலைமையை தெரிந்து கொண்டு அம்மாவை பார்க்க ஆதிரை, வந்தபோது ஞானம் மற்றும் கதிர் அனைவரும் அவளை பார்க்க விடாமல் தடுக்கின்றனர். அப்போது அருகில் இருப்பவர்கள், குணசேகரன் ஜெயிலுக்கு போக முக்கிய காரணமே உங்க பொண்டாட்டிங்க தான் ஆதிரை இல்லை என்று சொல்ல, கதிர், ஆதிரையை அம்மாவை பார்க்க சம்மதிக்கிறான்.
சொந்தக்காலில் நிற்கும் பெண்கள்: அம்மாவின் இந்த நிலைமை குறித்து சொல்வதற்கான அனைவரும் அவர் அவர் மனைவிக்கு போன் செய்ய, அனைவரும் அவர் அவர்களின் கனவை அடைய கிளம்பி விட்டனர். ஈஸ்வர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறாள். ரேணுகாவும் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறாள், நந்தினியும் தனக்கு தெரிந்த சமையல் தொழிலை வைத்து படிப்படியாக முன்னேறி வருகிறாள். அதே போல ஜனனி கணவர்களால் கைவிடப்படும் பெண்களுக்கு ஊக்கத்தை அளித்து அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறாள். அவர்கள் அனைவருக்கும் அப்பத்தா ஆதரவாக இருக்கிறார்.
மருமகள் என்ன கில்லு கீரையா: குணசேகரன் வீட்டுக்கு அடிமையாக வந்த நான்கு மருமகளும் தற்போது அவர்களின் சொந்த காலில் நிற்க ஆரம்பித்து விட்டார்கள். மருமகளை கில்லு கீரையாக நினைத்து, ஆட்டி படைத்த குணசேகரன் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். அவரை எப்படியாவது வெளியே கொண்டுவரவேண்டும் என்று அவரது தம்பிகள் படாதபாடுபட்டு கோர்ட் கேஸ் என்று அழைத்து வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய எதிர்நீச்சல் தொடர்ச்சி சீரியலை உங்கள் சன் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











