Ethirneechal: நானும் ஜீவானந்தமும் நட்பு ரீதியா ஒரே வீட்டில் இருக்கிறோம்.. கண்கலங்கி பேசிய ஈஸ்வரி!
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் திங்கட்கிழமை முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதில் குணசேகரன் சிறையில் இருப்பதை நினைத்து விசாலாட்சி கவலையால், உடலை கவனித்துக் கொள்ளாமல் மயக்கமடைந்துவிடுகிறாள். இதனால் பதறிப்போகின்றனர். அம்மாவை பார்க்க ஆதிரை வந்தபோது கதிர் அவளைப் பார்க்க விடாமல் தடுத்து விடுகிறார்.
இதைத்தொடர்ந்து விசாலாட்சி, ஈஸ்வரியை பார்க்க வேண்டும் என்று சொல்ல, கொடைக்கானலில் இருக்கும் ஈஸ்வரியை அழைத்து வருவதற்காக அவரது மகன் தர்ஷன் கொடைக்கானலுக்கு செல்கிறான். அப்போது ஈஸ்வரி, ஜீவானந்தத்துடன் இருப்பதை பார்த்து ஆத்திரப்பட்டு கோபத்தில் கத்துகிறான்.

அம்மா மனசை கெடுத்துட்டீங்க: இப்போது ஜீவானந்தம் கோபப்படாமல் பேசு தர்ஷா, என்று சொல்ல மேலும் ஆத்திரப்படும் தர்ஷன். உங்களால தான் எங்க குடும்பத்துக்கே பிரச்சனை, இந்த ஊர்ல எங்க அம்மாவ பத்தி கேட்டா எல்லாரும் தப்பு தப்பா பேசுறாங்க, கேவலமா பாக்குறாங்க அந்த அளவுக்கு எங்க அம்மாவோட மனசை நீ மாத்தி வெச்சி இருக்க என்று கோபத்தில் பேசுகிறான். அம்மாவைப் பற்றி தவறாக பேசியதால் ஆத்திரப்படும் தர்ஷனை, தர்ஷினி என்ன தெரிஞ்சுதுன்னு நீ அம்மாவை பத்தி இப்படி தப்பா பேசுற, தர்ஷினி சத்தம் போட்டு இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இதை பார்த்துக்கொண்டு இருந்த ஜீவானந்தம், தர்ஷினி இப்ப நாம எதுவும் பேச வேண்டாம் அவன் அவங்க அம்மா கூட பேச வந்திருக்கான். அவங்க ரெண்டு பேரும் பேசிக்கட்டும் நாம போகலாம் என்று உள்ளே சென்று விடுகிறார்.
கேவலமான வாழ்க்கை இது: அப்போது பேசும் தர்ஷன், இந்த வாழ்க்கை வாழ்வதற்காக தான், என்னை அந்த வீட்டில் விட்டுட்டு வந்துட்டீங்களா? அப்ப உங்களோட வாழ்க்கை தான் உங்களுக்கு முக்கியமா? என்னைய பத்தி நீங்க யோசிக்கவே இல்லையே என்று கண் கலங்குகிறான். அப்போது பேசும் ஈஸ்வரி, வாழ்க்கையிலு நான் பல வருஷமா மத்தவங்களுக்காகத்தான் வாழ்ந்து இருக்கேன். எனக்காக என்னோட லட்சியத்துக்காக நான் எதையுமே எப்போதுமே வாழ்ந்ததே இல்ல. ஆனா நான் இப்போது வாழ்கிறேன். நான் ஜீவானந்தத்துடன் நட்பு ரீதியாக ஒரே வீட்டில் இருக்கேன். அது மத்தவங்களோட பார்வைக்கு தப்பா தெரியலாம். ஆனா உன்னோட பார்வைக்கு எப்படி தப்பா தெரியுதுனு எனக்கு புரியல. இப்ப நீ எந்த விஷயத்துக்காக இங்க வந்தே என்று கேட்கிறாள்.
வர மறுக்கும் ஈஸ்வரி: அங்கு அப்பத்தாவிற்கு உடம்பு சரியில்லை உன்னை பார்க்க வேண்டும் என்று சொல்றாங்க, அதான் சித்தப்பா உன்னை அழைத்துவர சொன்னாங்க, வா அம்மா போகலாம் என்று தர்ஷன் அழைக்க, அப்போது கதிரிடம் இருந்து போன் வர, தர்ஷன் போனை எடுத்து, நான் அப்போவே சொன்னேனே சித்தப்பா, இப்போ இவங்களுக்கு நாம முக்கியம் இல்லை, இவங்க இப்போ வேறமாதிரி இருக்காங்க என்று சொல்ல, கதிர், நீ போனை அம்மாகிட்ட கொடு என்று சொல்ல, ஈஸ்வரி போனை வாங்கி பேச, கதிர், அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. அவங்க உன்னை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், நீங்கள் வரவேண்டும் என்று சொல்ல , ஈஸ்வரி நான் வரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறாள். இதையடுத்து தர்ஷன் கோவத்தோடு அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.


Click it and Unblock the Notifications











