Ethirneechal: அடுத்த குணசேகரனாக மாறிய ஈஸ்வரியின் மகன்.. அடுத்து நடப்பது என்ன?
சென்னை: விசாலட்சிக்கு உடம்பு சரியில்லாததால், தர்ஷன் ஈஸ்வரியை அழைத்து வர வருகிறான். அங்கு ஜீவானந்தம் இருப்பதை பார்த்து கோபப்படும் தர்ஷன். இந்த வாழ்க்கை வாழ்வதற்காக தான், என்னை அந்த வீட்டில விட்டுட்டு வந்துட்டீங்களா? அப்ப உங்களோட வாழ்க்கை தான் உங்களுக்கு முக்கியமா? என்னைய பத்தி நீங்க யோசிக்கவே இல்லையே என்று கண் கலங்குகிறான்.
அப்போது பேசும் ஈஸ்வரி, வாழ்க்கையில நான் பல வருஷமா மத்தவங்களுக்காகத்தான் வாழ்ந்து இருக்கேன். எனக்காக என்னோட லட்சியத்துக்காக எப்போதுமே வாழ்ந்ததே இல்ல. ஆனா நான் இப்போது வாழ்கிறேன். நான் ஜீவானந்தத்துடன் நட்பு ரீதியாக ஒரே வீட்டில் இருக்கேன். அது மத்தவங்களோட பார்வைக்கு தப்பா தெரியலாம். ஆனால், என்னைப்பத்தி நல்லா புரிந்து கொண்டவர்களுக்கு என்னைப்பற்றி நன்றாக தெரியும் என்று சொல்லி, நான் வரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறாள். இதைத்தொடர்ந்து நேற்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

அம்மானு கூப்பிடவே அசிங்கமா இருக்கு: வீட்டிற்கு வந்த தர்ஷனிடம் கதிர் என்ன ஆச்சு, ஈஸ்வரி என்ன சொன்னாங்க என்று கேட்க, அவங்களைப்பத்தி பேசவே எனக்கு பிடிக்கல, அவங்க வேற மாதிரி வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்காங்க, அவங்களுடைய பேர சொன்னாலே அந்த ஊர்ல இருக்குறவங்க எல்லாம் தப்பா பாக்குறாங்க. இருந்தும், அவங்க கிட்ட அப்பத்தாக்கு உடம்பு சரியில்ல வாங்கன்னு சொன்னேன். ஆனா அவங்க வர ஐடியாவிலேயே இல்ல. அவங்க அந்த வாழ்க்கையை விட்டுட்டு இங்க வரவும் மாட்டாங்க. அவங்கள அம்மான்னு சொல்லிக்குறதுக்கு எனக்கு தான் அசிங்கமா இருக்கு தயவு செய்து அவங்கள எங்க கூப்பிட்டு என்னையும் எங்க அப்பாவோட மானத்தையும் வாங்கிடாதீங்க என்று கோவத்தோடு கத்திவிட்டு சென்றுவிடுகிறான்.
பொம்பளையா: அதைத்தொடர்ந்து கதிர், சக்தியிடம் அந்த பொம்பளைக்கு போன் போடுடா, நான் அவகிட்ட பேசுறேன். இங்கே இவ்வளவு பிரச்சனை நடக்கும் போது அந்த பொம்பள அங்க போய் கூத்தடிச்சுக்கிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கா, நீ அவளுக்கு ஃபோனை போடு, நான் ரெண்டுல ஒன்னு கேக்குறேன் என்று கோவத்துடன் பேச, சக்தி, அமைதியா இரு அண்ணா, தர்ஷன் என்ன சொல்றான்னு தெரிஞ்சுக்காம நாம பேசக்கூடாது அவன் சின்ன பையன் நாம தான் புரிய வைக்க வேண்டும் என்று சமாதானப்படுத்துகிறான்.
வீட்டுக்கு வரும் ஈஸ்வரி: ஜீவானந்தம். ஈஸ்வரியிடம் இந்த நேரத்துல நீங்க உங்க வீட்டுக்கு போறது தான் சரியானதாக இருக்கும் என்று சொல்ல, அதிர்ச்சியான ஈஸ்வரி, மறுபடியும் அந்த வீட்டுக்கு நான் எப்படி போய் வாழ முடியும்னு நீங்க நினைக்கிறீங்க, அந்த வீட்ல என்ன எல்லாம் நடந்துச்சனு நீங்க மறந்துட்டீங்களா? என்று கேட்க, ஜீவானந்தம், அந்த வீட்டிலேயே உங்கள யாரு இருக்க சொன்னா, அந்த வீட்ல என்ன நடக்குது, அத்தைக்கு என்னா ஆச்சுனு போய் பாருங்க, அவங்கள போய் பாத்துட்டு வாங்க என்று சொல்ல, ஈஸ்வரி அங்கிருந்து வீட்டுக்க கிளம்புறாங்க.
இன்றைய ப்ரோமோ: தற்போது, இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியிருக்கு, அதில், ஈஸ்வரி வீட்டுக்கு வரா, வீட்டுல மீண்டும் பிரச்சனைகள் முளைக்குது. அனைவரும் சூழ்ந்து கொண்டு ஈஸ்வரியை திட்ட, என்ன பழைய ஈஸ்வரினு நினைச்சியா, பயந்துகிட்டு இந்த வீட்டை விட்டு ஓடுவேனு நினைக்காதீங்க என்று சொல்ற மாதிரி ப்ரோமோ வெளியாகி இருக்கு அடுத்து என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











