Ethirneechal: புருசன் ஜெயில்ல இருக்கான்.. நீ வேற ஒருத்தன் கூட கூத்து அடிக்கிறியா? கதறி அழுத ஈஸ்வரி!

சென்னை: அப்பத்தாவிற்கு உடம்பு சரியில்லை என்று தர்ஷன் வந்து கூப்பிட ஈஸ்வரி வரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறாள். இதையடுத்து தர்ஷன் கோபத்தோடு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து வாய்க்கு வந்ததை பேச, அம்மா அந்த ஜீவானந்தத்தோடு சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறான். இதையடுத்து, ஜீவானந்தம் , நீ வீட்டுக்கு போய், அத்தைக்கு என்ன ஆச்சு என்று பார்த்துவிட்டுவா என்று சொல்ல, ஈஸ்வரி மகள்களை அழைத்துக் கொண்டு வருகிறாள்.

அப்போது வாசலில் நின்றும் கதிர், வீட்டுக்குள்ள விடமாட்டேன், புருசனை ஜெயிலுக்கு அனுப்பிவைத்துவிட்டு, வேற ஒருத்தன் கூட கூத்து அடிக்கிறியா? என்று கேட்கிறான். இதனால், ஆத்திரப்படும் சக்தி, கதிரை ஓங்கி ஒரு அறைவிட்டு, அண்ணியா பார்த்து என்ன பார்த்தை சொல்ற என்று சொல்ல, கதிர் அவமானத்தால் அமைதியாகிறான். இதையடுத்து நேற்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

ethirneechal thodargiradhu sun tv

எதிர்நீச்சல்: விசாலாட்சி நலம் விசாரித்துவிட்டு ஊருக்கு கிளம்புவதற்காக ஈஸ்வரி தயாராகிக் கொண்டு இருக்க, இதைப்பார்த்த விசாலாட்சி, ஈஸ்வரி என்னை விட்டு போகாதே, நான் பண்ணது எல்லாம் தப்புதான் என்னை மன்னிச்சிடு. இனிமே இந்த வீட்ல உனக்கு கெட்டதும் நடக்காம நான் உன்னை பார்த்துக்கிறேன். நீ இந்த வீட்டிலேயே இரு என்று கெஞ்சி கதறி அழுகிறாள். இதை பார்த்ததும் மனம் மாறிய ஈஸ்வரி நான் இந்த வீட்டிலேயே இருக்கேன் என்கிறாள். .

எல்லாமே நாடகம்: ஈஸ்வரி வீட்டில் இருப்பதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது நந்தினி, அக்கா நீங்க இங்க இருக்காதீங்க அவங்க , உடம்பு சரியில்லை என்ற நாடகம் போடுறாங்க. அவங்களுக்கு நாம நல்லா இருக்கிறது பிடிக்கல, அவங்களோட மனசுல நாம நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க அதனாலதான் அவங்க உடம்பு சரியில்லனு சொல்லி நாடகம் போடுகிறார்கள். இது உங்களுக்கு தெரியலையா?

ethirneechal thodargiradhu sun tv

தயவு செய்து போங்க: நேத்து உங்களைப் பார்க்கும் போது ஒரு தெளிவான முடிவுல இருக்கீங்கனு நெனச்சேன். ஆனா இப்ப நீங்க, எடுத்தது சரியான முடிவு இல்ல, உங்கள பார்த்தா வீட்டில் இருக்கிற ஆம்பளைங்க எல்லாமே டென்ஷனாகி, ஆளாளுக்கு பேசுறாங்க மறுபடியும், நம்மல இந்த வீட்டிலேயே வச்சு அமுக்க பாக்குறாங்க. அதுக்கு நம்ம இடம் தர கூடாது, தயவு செய்து நீங்க இந்த வீட்ல இருந்து கிளம்புங்க என்று நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் சொல்கின்றனர்.

எனக்கு ஈகோ இல்ல: அப்போது பேசும் ஈஸ்வரி, நந்தினி, இந்த நேரத்துல நான் வீட்டை விட்டு போவது சரியானதாக இருக்காது, எனக்கு எந்தவிதமான ஈகோவும் இல்ல, அவங்க கிட்ட நான் எந்த பாசத்தையும் எதிர்பார்க்கல, இப்போ நான் இந்த வீட்டில் நான் இருக்கேனு சொன்னது, மனிதாபிமானத்தாலத்தான், அத்தை பலமுறை என்னை காயப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், சில நேரம் எனக்கு அவர்கள் ஆதரவாக இருந்து இருக்கிறார்கள். அதனாலத்தான் நான் இருக்கேனு சொன்னேன் என்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X