ராணாவுடன் கூட்டு சேர்ந்த அறிவுக்கரசி.. குழப்பத்தில் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: கோமா நிலையிலிருந்து மீண்டு வந்த ஈஸ்வரி, தனது வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான விஷயங்களை மறந்த நிலையில் இருப்பது குடும்பத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தர்ஷன் மற்றும் பார்கவி திருமணம் நடைபெற்றது குறித்து குடும்பத்தினர் தெரிவித்தபோது, ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, குடும்பத்தினரிடம் ஏன் இந்த விஷயம் தன்னிடம் கூறப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய ஈஸ்வரிக்கு, ஜனனி விளக்கம் அளிக்கிறார். மருத்துவரின் ஆலோசனைப்படி, சில விஷயங்களை கூறினால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் உண்மைகளை மறைத்ததாக அவர் தெரிவிக்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதற்கிடையில், அறிவுக்கரசி கடும் கோபத்தில் குடும்பத்தினருக்கு எதிராக பழிவாங்குவேன் என எச்சரிக்கிறார். "எத்தனை முறை என்னை ஏமாற்றினீர்கள், இந்த வீட்டில் ஒருவரையும் நான் விடமாட்டேன்" என அவர் கடுமையாக பேசுகிறார். மேலும், தனது தங்கச்சிக்காக இதுவரை பொறுத்துக் கொண்டதாகவும், இனிமேல் அனைத்திற்கும் பதிலடி கொடுப்பேன் என்றும் உறுதியாக தெரிவிக்கிறார். இந்த சூழலில், அறிவுக்கரசிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசும் ராணா, என்ன குணசேகரன் உன்னை வெளியில் துரத்திவிட்டானா? குணசேகரனுக்கு எதிராக இணைந்து பழிவாங்கலாம் என முன்வைக்கிறார். ஆனால், தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், "சரியான நேரத்தில் சொல்கிறேன்" எனக் கூறி அழைப்பை முடிக்கிறார். இது கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
குழப்பத்தில் ஈஸ்வரி: மற்றொரு பக்கம், பட்டாம்மா ஈஸ்வரியை பார்க்க வீட்டிற்கு வருகிறார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஈஸ்வரிக்கு நினைவில் இல்லாதது அவருக்கு தெரியாததால், ஈஸ்வரியை பார்த்து, இவ்வளவு விஷயம் நடந்தும் எப்படி எதுவுமே நடக்காதது போல இவ்வளவு அமைதியாக இருக்க ஈஸ்வரி என்று கேட்க, ஈஸ்வரி என்ன என்று தெரியாமல் குழப்பம் அடைகிறாள். இதனால், ஈஸ்வரிக்கு உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என குடும்பத்தினர் கவலையில் ஆழ்கின்றனர். இவ்வாறு பரபரப்பான திருப்பங்களுடன் இந்த எபிசோடு நிறைவடைந்துள்ளது. அடுத்த எபிசோடில் என்ன நடைபெறுகிறது என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











