ஜனனிக்கு அப்பத்தா கொடுத்த அட்வைஸ்.. கடுப்பில் குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஈஸ்வரியை பார்க்க அப்பத்தா வீட்டிற்கு வர, குணசேகரன் கோவப்படுகிறான். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஈஸ்வரிக்கு நினைவில் இல்லாதது அவருக்கு தெரியாததால், ஈஸ்வரியை பார்த்து, இவ்வளவு விஷயம் நடந்தும் எப்படி எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருக்க என்று கேட்க, ஈஸ்வரி என்ன என்று தெரியாமல் குழப்பம் அடைகிறாள். இதனால், ஈஸ்வரிக்கு உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என குடும்பத்தினர் கவலையில் ஆழ்கின்றனர். ஆனால், நந்தினி எதையோ சொல்லி சமாளித்து விடுகிறாள்.
பின் அப்பாதா, அனைவரிடமும் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல, ஆத்திரப்படும் குணசேகரன். இவ எதுக்கு வீட்டுக்கு வந்தா, நல்லா இருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் இவளோட வேலை என்று ஆத்திரப்படுகிறான். மறுபக்கம் அப்பத்தா, ஈஸ்வரியிடம், தர்ஷனுக்கும் பார்கவிக்கும் கல்யாணத்தை நடத்தி வைக்க ஜனனி ரொம்ப கஷ்டப்பட்டா, அந்த நேரத்தில் நீ மயக்கத்தில் இருந்ததால், எதையும் உன்னிடம் சொல்ல முடியாமல் போய்விட்டது. இதற்காக நீ இவங்க மேல கோவப்படாதே என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி, எனக்கு உறவாக இருப்பதே இவங்க தான் இவங்க மேல நான் என்னைக்கும் கோவப்படா மாட்டேன் என்று சொல்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது ஒரு கஷ்டமான செய்தியை சொல்லிவிட்டேன், இப்போ ஒரு நல்ல செய்தியை சொல்கிறேன் என்று அனைவரும் சேர்ந்து தமிழ் சோறு ஆரம்பித்ததையும், ஆனால் வந்த பிரச்சனைகளையும் சொல்கிறார். இதைக்கேட்டு ஈஸ்வரி வருத்தப்பட்டது மட்டுமில்லாமல், என் தங்கைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு சாதித்து இருக்கிறார்கள் என்று சொல்லி பெருமைப்படுகிறாள். அதன்பின்,ஜனனியிடம் தனியாக பேசும் அப்பத்தா, இந்த வீட்டின் நிலைமையை மாறி இருக்கிறது. இதற்காக நீ சோர்ந்துவிடக்கூடாது. அவர்கள் யாரும் வாழ்க்கையில் முன்னேற வரவில்லை என்றாலும் நீ அவர்கள் மீது கோவப்படாமல் அவர்களை ஒத்துக்கிவைத்துவிட்டு உன்னுடைய வேலைகளை பார்க்க வேண்டும் அதற்காக உன் குழந்தை தனிப்பட்ட வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளக்கூடாது.
அப்பத்தா கொடுத்த அட்வைஸ்: உனக்கு உன் குழந்தை, சக்தி ரொம்ப முக்கியம் இதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என அட்வைஸ் கொடுக்கிறார். இதைக்கேட்ட ஜனனி நிச்சயம் அப்பத்தா என சொல்கிறாள். இவ்வாறு பரபரப்பான திருப்பங்களுடன் இந்த எபிசோடு நிறைவடைந்துள்ளது. அடுத்த எபிசோடில் என்ன நடைபெறுகிறது என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











