பார்கவியை தொட்டது கூட இல்ல.. சக்தியிடம் புலம்பிய தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: வீட்டிற்கு வந்த அப்பத்தா, ஈஸ்வரியிடம் தமிழ் சோறு ஆரம்பித்ததை சொல்கிறாள். இதைக்கேட்டு, ஈஸ்வரி மிகவும் சந்தோஷப்படுகிறாள். அதைத்தொடர்ந்து, ஜனனியிடம் தனியாக பேசும் அப்பத்தா, உனக்கு உன் குழந்தை, சக்தி ரொம்ப முக்கியம் இதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என அட்வைஸ் கொடுக்கிறார். இதைக்கேட்ட ஜனனி நிச்சயம் அப்பத்தா என சொல்கிறாள்.
இன்றைய எபிசோடில், தர்ஷன், பார்கவி இருவரும் ஒன்றாக பேசுகின்றனர். அப்போது தர்ஷன், அப்பத்தா வீட்டிற்கு வந்ததும், அம்மாவிடம் எதையாவது சொல்லி விடுவார்களோ என்று பயந்துவிட்டேன். ஆனால், நல்லவேலையாக அப்பத்தா தமிழ்சோறு பற்றி பேசி சமாளித்துவிட்டார்கள் என்கிறார். இதையடுத்து, தர்ஷன் பார்கவி மீது கை வைக்க அவள், கையை தட்டி விடுகிறார். இதனால், ஆத்திரப்படும் தர்ஷன், பார்கவியிடம் இதுக்கு மேலயும் நீ தள்ளி, தள்ளி போவது சரியில்லை. வீட்டில் நிலைமை சரியான பிறகு கணவன் மனைவியாக வாழலாம் என்று சொன்ன, ஆனால், இப்போ தான் அம்மா சரியாகிவிட்டார்களே, கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் சரியாகவிட்டே, இதுக்கு மேலையும் நாம சேராமல் இருப்பது சரியில்லை என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, பார்கவி, உண்மை தான் தர்ஷன், அம்மா சரியாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா, எனக்கும் ஒரு மனசு இருக்கு, நான் உன் கூட பிசிக்கல் ரிலேஷன்ஷிப் இருத்தா தான் அன்பா என்று கேட்கிறாள். இதனால் கோவப்படும் தர்ஷன், மனைவி என்கிற உரிமையில் தான் உன்னிடம் நான் அப்படி பேசினேன் என்று சொல்லிவிட்டு கோவத்தோடு தர்ஷன் வெளியே வருகிறான்.
எங்க இரண்டு பேருக்கும் எதுவும் நடக்கல: அப்போது, சக்தி அங்கே வர, தர்ஷன் சக்தி சித்தப்பாவிடம், நானும் பார்கவியும் கல்யாணம் ஆனதில் இருந்தே ஒன்றாக சேர்ந்து வாழவில்லை. கணவன் மனைவிக்குள் நடக்க வேண்டிய எதுவும் எங்களுக்கு நடக்கவில்லை என்கிறார். இதைக்கேட்டு சங்கடப்படும் சக்தி, இதுபற்றி நான் ஜனனி சித்தியிடம் பேசி பார்கவியிடம் இதுகுறித்து பேச சொல்கிறேன் என்கிறார். இதையடுத்து, சக்தி கீழே வந்து ஜனனியிடம் இந்த விஷயத்தை சொல்கிறான். இவ்வாறு பரபரப்பான திருப்பங்களுடன் இந்த எபிசோடு நிறைவடைந்துள்ளது. அடுத்த எபிசோடில் என்ன நடைபெறுகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











