ஜனனிக்கு வந்த வீடியோ.. குணசேகரன் குடும்பத்தை அழிக்க ராணாவின் பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: தர்ஷன் மற்றும் பார்கவிக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்காக ஜோசியர் ஒருவரும் வந்து நல்ல நேரம், தேதியை குறித்து கொடுக்கிறார். அதே நேரத்தில், கதையில் பெரிய திருப்பமாக ராணா, ஜனனிக்கு ஒரு அதிர்ச்சி வீடியோவை அனுப்புகிறார். அந்த வீடியோவில் ஆதி குணசேகரன், ஈஸ்வரியை அடிக்கும் காட்சி இருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்து பதறிப்போன ஜனனி, உடனே அதை குடும்பத்தினரிடம் காட்டுவதற்காக உள்ளே ஓடிச் செல்கிறார். ஆனால், வீடியோவை காட்ட முயற்சிக்கும் நேரத்திலேயே அது திடீரென டெலிட் ஆகிவிடுகிறது.இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஜனனியை சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். "எதாவது நல்ல விஷயம் நடந்தால் அதை கெடுப்பது ஜனனியின் வேலை ஆகிவிட்டது" என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதனால் மனவேதனையடைந்த ஜனனியை சக்தியை வெளியே அழைத்து வந்து என்ன நடந்தது என்று கேட்கிறார். அதற்கு ஜனனி, "பிரைவேட் நம்பரில் இருந்து ஒரு வீடியோ வந்தது. அதில், குணசேகரன், ஈஸ்வரி அக்காவை அடித்தது இருந்தது. முழு வீடியோவையும் நான் பார்த்தேன். அதை உனக்கு காட்டுவதற்குள் வீடியோ டெலிட் ஆகிவிட்டது. யார் அந்த வீடியோவை அனுப்பி இருப்பா, அந்த வீடியோவை வைத்து இருந்த அஸ்வினும் இறந்துவிட்டான். அவனிடம் இருந்து வீடியோவை எடுத்து சென்றவர் தான் இதை அனுப்பி இருக்க வேண்டும் என்கிறாள். இது பற்றி நான் மதிவதனிடம் பேச போகிறேன் என்று சக்தியிடம் சொல்லிவிட்டு வெளியில் கிளப்புகிறாள்.
ராணாவின் பிளான்: மறுபக்கம், இந்த அனைத்திற்கும் காரணமான ராணா, தனது பி.ஏ லட்சுமணனிடம் தனது திட்டத்தை வெளிப்படுத்துகிறார். "குணசேகரனுக்கும் ஜனனிக்கும் இடையே பெரிய பிரச்சனை கிளப்பிட்டேன். நான், ஜனனிக்கு வீடியோவை அனுப்பி விட்டேன். அந்த வீடியோ பார்த்த ஜனனி பதற்றத்தோடு அனைவரிடமும் காட்டுவதற்கான சென்று இருப்பாள், ஆனால், அந்த வீடியோவை பார்க்க முடியாது. வீட்டில் இருப்பவர்கள் ஜனனியை பார்த்து பைத்தியம் என நினைப்பாக்ரள். குடும்பத்துக்குள்ளேயே சண்டை உருவாகும்... அந்த குடும்பம் முழுவதும் சிதறும். "ஆதி முத்துவின் உண்மையான வாரிசு நான் தான்" அந்த குணசேகரனையும் அந்த குடும்பத்தையும், மொத்த குடும்பத்தையும் வாரிசே இல்லாமல் அழித்தே தீருவேன்" என்று சபதம் எடுத்துக் கொள்கிறார் ராணா. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











