தர்ஷன் பார்கவிக்கு மீண்டும் திருமணம்.. குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலில் நேற்றைய எபிசோடு பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எபிசோடு தொடங்கும் போது ராணா, குணசேகரனுக்கு போன் செய்து அதிர்ச்சி தகவலை பகிர்கிறார். "அந்த வீடியோ குறித்து உள்ள அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும். ஜனனி அதை பார்த்துவிட்டார். அவர் கலெக்டர் மதிவதனியை சந்தித்து, அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்பதை முழுமையாக கூறிவிட்டார்" என்று ராணா தெரிவிக்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதை நம்ப முடியாத குணசேகரனுக்கு, ஜனனி மற்றும் மதிவதனி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தையும் ஆதாரமாக அனுப்புகிறார். அந்த புகைப்படத்தை பார்த்த குணசேகரன் கடும் அதிர்ச்சியடைந்து, "இந்த ஜனனி சாதாரண பெண் இல்லை. அவளை நாம் சும்மா விடக்கூடாது" என்று கோபமாக கூறுகிறார். இதனைத் தொடர்ந்து, ஜனனியை ஒழித்து கட்டுவதற்கான சதித் திட்டம் திட்டம் தீட்டுகின்றனர்.

பழிதீர்க்க துடிக்கும் ராணா: மறுபக்கம் ராணா, குணசேகரன் மற்றும் ஜனனி இடையே பெரிய பிரச்சனையை உருவாக்கி விட்டதாக பெருமையாக கூறுகிறார். "இனி அந்த வீட்டில் பிரச்சனை தீப்பிடித்தாற்போல் பரவும். அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அழித்துவிட்டு தான் நான் அமைதியாக இருப்பேன் என்று பிஏ லட்சுமணனின்டம் சொல்கிறார். மேலும், "நம்ம தொழில் குறித்து பல விஷயங்கள் ஜனனிக்கு தெரிந்துவிட்டது. ஆலிவர் தலைமறைவாக இருப்பதற்குக் காரணமே ஜனனி தான். மதிவதனியை ஒழித்துவிட்டு என் மகளுடன் அமைதியாக வாழ நினைத்தேன். ஆனால், அதை ஜனனி நாசமாக்கிவிட்டார். அதனால் அவளை நான் சும்மா விடமாட்டேன் என்கிறார் ராணா.
கலங்கிய ஈஸ்வரி: இதே நேரத்தில் குணசேகரன் வீட்டில் ஈஸ்வரி, ஜனனியின் மாற்றமான நடத்தையை கவனித்து கவலையடைகிறார். "ஜனனி, உனக்கு என்ன ஆனது? நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? ஜோசியர் வந்தபோது நீ ஏன் வீட்டை விட்டு வெளியே போன? தயவு செய்து என்னிடம் சொல்லு" என்று கண்ணீர் மல்க கேட்கிறார். இதனால், பதறிப்போன ஜனனி, "அதெல்லாம் ஒன்றும் இல்லை" அக்கா என சமாளிக்கிறாள். இதையடுத்து ஈஸ்வரி நாளைக்கு அனைவரும் சேர்த்து பார்கவிக்கு புடவை எடுக்கலாம் என்கின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications