குணசேகரன் மனம் மாறுவாரா? ராவணனின் பிரச்சனை தீவிரமாகுமா? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஈஸ்வரி, ஜனனியின் மாற்றமான நடத்தையை கவனித்து கவலையடைகிறார். "ஜனனி, உனக்கு என்ன ஆனது? நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? ஜோசியர் வந்தபோது நீ ஏன் வீட்டை விட்டு வெளியே போன? தயவு செய்து என்னிடம் சொல்லு" என்று கண்ணீர் மல்க கேட்கிறார். இதனால், பதறிப்போன ஜனனி, "அதெல்லாம் ஒன்றும் இல்லை" அக்கா என சமாளிக்கிறாள். இதையடுத்து ஈஸ்வரி நாளைக்கு அனைவரும் சேர்த்து பார்கவிக்கு புடவை எடுக்கலாம் என்கின்றனர்.
இன்றைய எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோடில் குடும்ப உணர்ச்சிகளும், மோதல்களும் கலந்த முக்கிய திருப்பங்களைக் காட்டுகிறது. பார்கவியின் திருமணத்திற்காக புடவை எடுக்க அனைவரும் தயாராகும் போது, ஈஸ்வரி குணசேகரனை அழைக்கிறார். ஆனால், குணசேகரன், கடந்த காலத்தில் ஜனனி-சக்தி கல்யாணத்தில் நடந்த மனவருத்தங்களை நினைவுபடுத்துகிறார். அன்னைக்கு நான் நடந்த விஷயத்தை மறக்கவே இல்லை. அன்னையில் இருந்து எனக்கும் ஜனனிக்கும் பிரச்சனையாகத்தான் இருக்கிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது:"நான் வந்தால் உங்களுக்கு இடையூறு ஆகிவிடும்" என்று சொல்லி விலகிக் கொள்கிறார். இதனால், மற்றவர்கள் மட்டும் சந்தோஷமாக புடவை எடுக்க கிளம்புகின்றனர். காஞ்சிபுரம் செல்லும் இந்த பயணம் வெளிப்படையாக மகிழ்ச்சியாக இருந்தாலும், ஜனனி இவை அனைத்தையும் குணசேகரன் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் செய்கிறார். அதை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அமைதியாக இருக்க வேண்டும் என மதிவதனி சொன்னதை நினைத்துக்கொண்டு, எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் புடவை எடுக்க கிளம்புகிறாள்.
நடக்கப்போவது என்ன: மறுபக்கம், கதையின் டோன் முற்றிலும் மாறுகிறது. இராவணனின் அலுவலகத்துக்கு வரும் மதுவதனியின் வழக்கறிஞர், மனைவியை கொடுமைப்படுத்துவது, தொடர்ந்து தொந்தரவு செய்வது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இனிமேல் மனைவிக்கும் குழந்தைக்கும் அவருடன் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் ராவணன், இதுவரையில் நான் யாரிடமும் தோற்றது இல்லை, இந்த மதிவனியிடம் தோற்கிறேனா என பார்க்கிறேன் என்கிறார். உடனே வழக்கறிஞர் ஏன் மதிவதனியை இப்படி டார்ச்சர் செய்கிறீர்கள் என்று கேட்க ஆத்திரப்படும் ராவணன் வழக்கறிஞர் என்று பார்க்காமல் ஆத்திரப்பட்டு கத்துகிறார். இதையடுத்து நாளைய எபிசோடில் குணசேகரன் மனம் மாறுவாரா? அல்லது இராவணனின் பிரச்சனை மேலும் தீவிரமாகுமா? என்பதே பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications