குழப்பத்தில் ஜனனி.. ராவணனின் மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில் இராவணனின் அலுவலகத்துக்கு வரும் மதுவதனியின் வழக்கறிஞர், மனைவியை கொடுமைப்படுத்துவது, தொடர்ந்து தொந்தரவு செய்வது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இனிமேல் மனைவிக்கும் குழந்தைக்கும் அவருடன் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் ராவணன், இதுவரையில் நான் யாரிடமும் தோற்றது இல்லை, இந்த மதிவனியிடம் தோற்கிறேனா என பார்க்கிறேன் என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி என அனைவரும் ஒன்றாக காரில் புடவை எடுக்கச் சென்று கொண்டு இருக்கின்றனர். அப்போது ஜனனி தொடர்ந்து அந்த வீடியோ எப்படி டெலிட் ஆனது என்று போனை பார்த்துக்கொண்டே இருக்கிறார். அந்த நேரத்தில் திடீரென வீடியோ டவுன்லோடு ஆகுவதைக் கண்டு, அதை நந்தினியிடம் காட்டுகிறார். ஆனால், அதில் கார்ட்டூன் தான் வருகிறது. இதைப் பார்த்து நந்தினி, ஜனனிக்கு என்ன ஆனது என்று யோசிக்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

ராவணனின் பிளான்: இதற்குப் பிறகு அனைவரும் புடவை எடுக்க கடைக்கு செல்கின்றனர். அப்போது ஜனனிக்கு ராவணன் போன் செய்து, "நீங்கள் புடவை எடுக்க வந்திருக்கிறீர்களே, நான் கடைக்கு வெளியே இருக்கிறேன்" உங்களிடம் முக்கியமான ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்கிறார். உடனே ஜனனி, அவரை பார்க்க வெளிவே வருகிறார். ஆனால், அங்கு யாரும் இல்லாததால் அந்த நம்பருக்கு போன் செய்கிறாள். ராவணன் போனை எடுக்காமல், அங்க என்னால் நிற்க முடியவில்லை, தெரு முனையில் இருக்கிறேன், அங்கே வாருங்கள் என்று சொல்கிறான்.

குழப்பத்தில் ஜனனி: ஜனனி அந்த இடத்திற்கு சென்று பார்க்கிறார். ஆனால் அங்கிருந்து ராவணன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகிறான். அப்போது, ராவணன் தனது பிஏ லட்சுமணனிடம், "இப்போ ஜனனி பெரிய குழப்பத்தில் இருப்பார்; யார் போன் செய்தது என்று யோசித்துக் கொண்டிருப்பார். அடுத்து அவள் என் மனைவி மதிவதனியை பார்க்க செல்வார்" என்று சொல்கிறான். அவர் நினைத்தது போலவே, ஜனனி ஆட்டோவில் ஏறி மதிவதனியை பார்க்க கிளம்புகிறார். அப்போது தர்ஷினி வெளியே வந்து, "சித்தி, எங்கே போகிறீர்கள்?" என்று கேட்க, "நான் ஒரு முக்கியமான விஷயமாக செல்கிறேன், நீங்கள் வீட்டுக்கு போங்கள்" என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மதிவதனி வீட்டுக்கு வந்த ஜனனி, "யாரோ என்னை திட்டமிட்டு குழப்புவதற்காக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X