ஈஸ்வரிக்கு மல்லிப்பூ வாங்கி கொடுத்த குணசேகரன்.. செம சீன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: மதிவதனி ஜனனிக்கு போன் செய்து நாம் நினைக்கும்படி ஆலிவர் தேவசகாயத்தின் டீம் சாதாணமான இடத்தில் இல்லை. நாம நினைத்ததை விட பெரிய இடத்தில், நாம் தொட முடியாத உயர்த்தில் இருக்கிறார்கள். ஆலிவரை கைது செய்தால் கூட , அவன் தன் தலைவன் பற்றி சொல்ல மாட்டான் என்று சொல்கிறார். இதைக் கேட்ட ஜனனி, என்ன மேடம் சொல்றீங்க, இந்த மாதிரி கொடூரமான ஆட்களை எல்லாம் நாம உயிருடன் விடவே கூடாது. இவர்கள் நம்ம வருங்கால சன்னதிகளையே அழித்துவிடுவார்கள் என்கிறார்.
இதையடுத்து, மதிவதனி, இந்த கூட்டத்தோட தலைவன் யார் என்பதை கண்டுபிடித்து, சரியான தாண்டனை வாங்கி தருகிறேன் என்கிறார். அப்போது, மதிவதனியின் மகள், அம்மா நான் பழைய அறையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்தேன். அந்த போட்டோவில் இருப்பது யார் என்று கேட்டு அந்த போட்டோவை காட்டுகிறாள். அந்த போட்டோவில் மதிவதனி மாலையும் கழுத்துமாக இருக்க அருகில் ராவணன் இருக்கிறான். இதன் மூலம் ராணா தான் மதிவதனியின் கணவர் என்பது தெரியவருகிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து இன்றைய எபிசோடில் ஆதிகுணசேகரன், ஈஸ்வரி மல்லி பூவை கொடுத்து, சாமிக்கு வாங்கி வந்தேன், நீயும் தலையில் வைத்துக்கொள் என்கிறார். இதைக்கேட்டு சந்தோஷப்படும் ஈஸ்வரி பூவை தலையில் வைத்துக்கொள்கிறாள். அப்போது, ஆதி குணசேகரன், அப்படி வாழ்க்கை வாழலாமா... இது தெரியாமல் இத்தனை வருடத்தை வீணாக்கிவிட்டேன் என்று சொல்கிறார். பின், ஈஸ்வரி என் கையால் அனைவருக்கும் சமைத்துப்போட்டு ரொம்ப நாளாகிவிட்டது. இன்னைக்கு நான் சமைக்கிறேன் என்று சொல்லி சமைக்கிறாள்.
கோவத்தில் தர்ஷினி: பின் குணசேகரன், கதிர்,ஞானம் என அனைவரும் சேர்த்து சாப்பிடுகின்றனர். அப்போது ஈஸ்வரி உணவு பரிமாற, குணசேகரன், இதுமாதிரி ரசத்தை நான் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு என்று சொல்லி ஈஸ்வரியை பாராட்டுகிறார். இதைக்கேட்ட ஈஸ்வரி, சமைப்பதை விட, அதை பாராட்டும் போது மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு என சொல்கிறாள். இவை அனைத்தையும் பார்த்து தர்ஷினி கோவப்படுகிறாள். அப்போது, நந்தினி, கோவப்படாதே, அக்காவிற்கு இவர் செய்த கொடுமை எல்லாம் நினைவில் இல்லை அதான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என சொல்கிறார்.
மனம் மாறினாரா குணசேகரன்: பின், ஈஸ்வரி, குணசேகரன் அறையில் சென்று படுத்துக்கொள்கிறாள். அம்மாவை காணவில்லை என தர்ஷினி தேட, அம்மா, அப்பாவின் அறையில் இருப்பதை பார்த்து கோவப்பட்டு சத்தம் போடுகிறாள். அப்போது ஜனனி எழுந்து வந்து, அம்மா நடந்த விஷயம் எல்லாத்தையும் மற்நதுவிட்டார்கள். அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். இதனால், இப்போது நாம் அமைதியாக இருப்போம் என சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்,.


Click it and Unblock the Notifications











