ஈஸ்வரிக்கு எதிரியாகும் ஜனனி.. குணசேகர் போட்ட பக்கா பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: வீடியோ பிரச்சனையால் ஜனனி வீட்டை விட்டு வெளிய போவதாக சொல்கிறார். அப்போது குணசேகரன், ஜனனி எதுக்கு வீட்டை விட்டு வெளியில போகணும், கதிர் நீ தானே ஜனனியை அடிக்க போன, ஜனனி கிட்ட நீ மன்னிப்பு கேள், தம்பி பொண்டாட்டிய அடிக்க நீ யார் என திட்டுகிறார். ஆனால் கதிர், என் மேல தேவையே இல்லாம பழி போட்டது ஜனனி தான், நான் மன்னிப்பு கேட்க அவசியமே இல்ல என்று சொல்கிறாள். அப்போது அங்கு வரும் ஜனனி, எனக்காக யாரும் இந்த வீட்ல பேச வேண்டாம் உண்மையை எத்தனை நாளைக்கு மறைச்சு வைக்க முடியாது. உண்மை என்னைக்காவது ஒருநாள் நிச்சயமா வெளியில வரும். நான் இந்த வீட்டை விட்டு போறேன் என வீட்டில் இருந்து சக்தியுடன் கிளம்புகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் நேராக மதிவதனி வீட்டிற்கு போகும் ஜனனி, வீட்டில் நடந்த விஷயத்தை சொல்கிறாள். இதைக்கேட்ட அவர், என்ன ஜனனி எல்லா விஷயத்தலும் நீங்க தெளிவான முடிவை எடுப்பீங்க, அப்படி இருக்கும் போது எதுக்காக இந்த நேரத்தில் வீட்டை விட்டு வந்தீங்க, நீங்க வீட்டில் இல்லாததை வைத்து இந்த குணசேகரன் எல்லா வழக்கில் இருந்து வெளியில் வந்து விடுவார். நீங்க வீட்டில் இருந்து இருந்தா அவருக்கு ஒரு பயம் இருந்து இருக்கும் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

கல்யாணம் முக்கியமா?: அப்போது ஜனனி, ஆமாம் மேடம் நானும் சக்தியும் இந்த நேரத்தில் வீட்டை விட்டு போகக்கூடாது என பல முறை யோசித்தோம். ஆனால், பார்கவி, தர்ஷன் கல்யாணத்தை நான் தடுப்பதற்காக திட்டம் போடுவது போல அனைவரிடமும் சொல்கிறார்கள். ஈஸ்வரி அக்காவும் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள் என சொல்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் மதிவதனி, இப்போ அந்த கல்யாணம் ரொம்ப முக்கியமாக ஏற்கனவே நடந்த கல்யாணம் தானே என சொல்கிறார். அப்போது சக்தி, ஆமாம், ஆனால், ஈஸ்வரி அண்ணிக்கு எதுவும் தெரியாது என்பதால்,எல்லாத்தையும் மறைச்சி இப்படி நாடகமாடுகிறார்கள். அவங்களுக்கு உண்மை தெரியவந்தா இப்படி எல்லாம் நடக்காது என்கிறார்.

எதிரியாகும் ஜனனி: மதிவதனி வீட்டில் இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து சந்தோஷப்படும், ராவணன், தனது பிஏ லட்சுமணனிடம் குணசேகரன் ஜெயிலுக்கு போவதற்குள் இந்த குடும்பத்தையே இரண்டாக்க வேண்டும் என்கிறார். அதே நேரம், இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் வீடியோவை, ராவணன் குணசேகரனுக்கு அனுப்பிவைக்கிறான். அந்த வீடியோவை குணசேகரன் ஈஸ்வரியிடம் காட்டி பாத்தியா ஜனனி என்னை ஜெயிலுக்கு அனுப்ப எப்படி திட்டம் போடுகிறாள் என சொல்லி ஈஸ்வரியை ஜனனிக்கு எதிரியாக மாற்றுகிறார். இதையடுத்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X