குணசேகரன் வீட்டுக்குள் குழப்பம்.. ராவணனின் பிளான் சக்சஸ்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: மதிவதனி வீட்டில் சக்தி, ஜனனி என இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து சந்தோஷப்படும், ராவணன், தனது பிஏ லட்சுமணனிடம் குணசேகரன் ஜெயிலுக்கு போவதற்குள் இந்த குடும்பத்தையே இரண்டாக்க வேண்டும் என்கிறார். அதே நேரம், இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் வீடியோவை, ராவணன் குணசேகரனுக்கு அனுப்பிவைக்கிறான். அந்த வீடியோவை குணசேகரன் ஈஸ்வரியிடம் காட்டி பாத்தியா ஜனனி என்னை ஜெயிலுக்கு அனுப்ப எப்படி எல்லாம் திட்டம் போடுகிறாள் என சொல்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் மதிவதனி, ஜனனி இருவரும் முடிவு செய்து சக்தியை வீட்டுக்கு அனுப்புகின்றனர். அப்போது சக்தியை பார்த்து கோவப்படும் குணசேகரன், என்ன அழிக்க திட்டம் போடுறீங்களா என அவர்கள் பேசிய வீடியோவை காட்டுகிறார். மேலும், அந்த மதிவதனி யாரு அவ வீட்டில் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க, அப்போது சக்தி பாதியை மட்டும் கேட்டுவிட்டு தேவையில்லாமல் பேசாதீங்க என்று சொல்கிறார். உடனே குணசேகரன், இதுக்கு மேலையும் பேசுனீங்களா... நான் கொலை காரனா... நீ பாத்தியா என்று கேட்க, கோவப்படும் சக்தி, எல்லாத்தையும் மறந்துவிட்டு பேசாதீங்க, நாங்க எதையும் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையில் இருக்கிறோம் என்கிறார்.
குழப்பத்தில் ஜனனி: அப்போது ஈஸ்வரி, சக்தி நீ ஜனனியை வீட்டுக்கு அழைத்துவா எல்லாத்தையும் பேசிக்கொள்ளலாம் என சொல்கிறார். உடனே சக்தி, இவர் பேச்சை கேட்டுக்கொண்டு நீங்களும் ஜனனியை தப்பா பேசாதீங்க என்று சொல்ல, அதெல்லாம் இப்போ பேசவேண்டாம் சக்தி,என் மேல மரியாதை இருந்தா, நீ ஜனனியை கூட்டிக்கொண்டுவா என சொல்கிறார். இதையடுத்து சக்தி அங்கிருந்து கிளம்பி மதிவதனி வீட்டுக்கு வருகிறார். வந்து, நாம பேசுனா எல்லா விஷயத்தையும் யாரோ ஒருவன் அண்ணாக்கு அனுப்பி இருக்கிறார். இதுமட்டுமில்ல இதற்கு முன் நீ மதிவதனி மேடம் கூட பேசுனதும் அண்ணாவிற்கு தெரிந்து இருக்க என சொல்கிறார். இதைக்கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைந்து அது எப்படி நடக்கும் என யோசிக்கிறார். மேலும், ஈஸ்வரி அண்ணி உன்னை அழைத்து வர சொன்னார்கள் என்று சொல்ல, ஜனனி என்னால் அந்த வீட்டுக்கு வர முடியாது என சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications