ஜனனியை அழிக்க இது தான் சரியான நேரம்.. பகடைக்காயாக மாறும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரன் ஈஸ்வரியிடம் நாடமாடி ஜனனி என்னை சிறைக்கு அனுப்ப பார்ப்பதாக நாடகமாடுகிறார். இதனால், ஜனவரி மீது கோவம் அடையும் ஈஸ்வரி, சக்தி நீ ஜனனியை வீட்டுக்கு அழைத்துவா எல்லாத்தையும் பேசிக்கொள்ளலாம் என சொல்கிறார். உடனே சக்தி, இவர் பேச்சை கேட்டுக்கொண்டு நீங்களும் ஜனனியை தப்பா பேசாதீங்க என்று சொல்ல, அதெல்லாம் இப்போ பேசவேண்டாம் சக்தி, என் மேல மரியாதை இருந்தா, நீ ஜனனியை கூட்டிக்கொண்டுவா என சொல்கிறார். இதையடுத்து சக்தி அங்கிருந்து கிளம்பி மதிவதனி வீட்டுக்கு வருகிறார்.

அப்போது சக்தி, நாம பேசுனா எல்லா விஷயத்தையும் யாரோ ஒருவன் அண்ணாக்கு அனுப்பி இருக்கிறார். இதுமட்டுமில்ல இதற்கு முன் நீ மதிவதனி மேடம் கூட பேசுனதும் அண்ணாவிற்கு தெரிந்து இருக்க என சொல்கிறார். இதைக்கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைந்து அது எப்படி நடக்கும் என யோசிக்கிறார். மேலும், ஈஸ்வரி அண்ணி உன்னை வீட்டுக்கு அழைத்து வர சொன்னார்கள் என்று சொல்ல, ஜனனி என்னால் அந்த வீட்டுக்கு வர முடியாது என சொல்கிறார். பின் சக்தி ஈஸ்வரிக்கு போன் செய்து ஜனனி வீட்டுக்கு வர விரும்பவில்லை. இந்த நிலையில் அவர் வீட்டுக்கு வருவது நன்றாக இருக்காது என சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், ஈஸ்வரியிடம் பேசும் தர்ஷினி, ஜனனி சித்தி தனியாக வாழ்வது தவறில்லை, பெண்களும் தனியாக முன்னேறி சாதிக்க முடியும், "எதற்கு இந்த வீட்டுக்கு வந்து சிக்தியும் கஷ்டப்பட வேண்டும்? என்கிறார். இதனால், கோவப்படும் ஈஸ்வரி, "ஒரு கூட்டு குடும்பத்தை உருவாக்குவது எவ்வளவு கடினம் தெரியுமா? ஒவ்வொருவரும் வீட்டை விட்டு போன என்ன அர்த்தம். இப்போத்தான் உங்க அப்பா கொஞ்சம் கொஞ்சமா மாறி வருகிறார். இந்த நேரத்தில் நாம அமைதியாகத்தான் போக வேண்டும் என்கிறார். இதைக் கேட்டு ஆத்திரப்படும் தர்ஷினி, "அப்பா முன்பு எப்படி இருந்தார்? இப்போது மாறிவிட்டார் என்று சொல்லுவது எனக்கு நம்பிக்கையில்லை" என்று நேராக கேள்வி எழுப்புகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி, தர்ஷினியை கடுமையாக எச்சரிக்கிறார்.

முடிவில் உறுதியாக இருக்கும் ஜனனி: இந்நிலையில், ஈஸ்வரி ரேணுகாவிடம் ஜனனியை வீட்டுக்கு வர சொல்லு என்கிறாள். அப்போது தர்ஷினி, யார் போன் செய்தாலும் சித்தி வர மாட்டாங்க என்கிறார். அப்போது ஈஸ்வரி நான் சொன்ன ஜனனி நிச்சயமா வீட்டுக்கு வா என்று சொல்லி ரேணுகாவை போன் பண்ண சொல்லி வீட்டுக்கு வர சொல்கிறார். ஆனால், அதற்கு ஜனனி, "இனி நான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன்" என்று உறுதியான முடிவை தெரிவிக்கிறார். இந்த பதில் கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். மறுபக்கம், குணசேகரன் தனது தம்பிகளுடன் சேர்ந்து, இது தான் சரியான நேரம் ஜனனியை மொத்தமாக முடித்துவிட வேண்டும் என்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X