இது என்னோட பைனல் அட்டாக்.. சீறும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திருப்பம்!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில், ஈஸ்வரி ரேணுகாவிடம் ஜனனியை வீட்டுக்கு வர சொல்லு என்கிறாள். அப்போது தர்ஷினி, யார் போன் செய்தாலும் சித்தி வர மாட்டாங்க என்கிறார். அப்போது ஈஸ்வரி நான் சொன்னா ஜனனி நிச்சயமா வீட்டுக்கு வருவா என்று சொல்லி ரேணுகாவை போன் பண்ண சொல்லி வீட்டுக்கு வர சொல்கிறார். ஆனால், அதற்கு ஜனனி, "இனி நான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன்" என்று உறுதியான முடிவை தெரிவிக்கிறார். இந்த பதில் கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். மறுபக்கம், குணசேகரன் தனது தம்பிகளுடன் சேர்ந்து, இது தான் சரியான நேரம் ஜனனியை மொத்தமாக முடித்துவிட வேண்டும் என்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், வீட்டுக்கு வரும் அட்வகேட் இந்த வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணம் ஜனனி தான். அவர் படித்துக்கொண்டு இருக்கும் போதே சக்திக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இந்த வீட்டுக்கு வந்த ஜனனிக்கு இந்த வீட்டில் இருக்க பிடிக்காததால், வீட்டை விட்டு வெளியேறினார். அந்த நேரம் அப்பத்தா வந்த ஜனனியை நன்றாக ஏற்றிவிட்டு, அவரின் மனநிலையை மாற்றி இந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார். வீட்டிற்கு வந்த ஜனனி, வீட்டில் இருக்கும் பெண்களை எல்லாம் கைக்குள் போட்டுக்கொண்டு பல வழக்குகளை போட்டார். அந்த வழக்கு தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

குணசேகரின் பிளான்: இதுக்கு மேலையும் இந்த வழக்குகள் எல்லாம் வேண்டாம், குடும்பத்தோடும், குழந்தைகளோடும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் அனைவரும் குணசேகரனால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று எழுதி கையெழுத்து போட்டு தரவேண்டும் என்று சொல்கிறார். நீங்க மட்டுமில்லாமல் இந்த வீட்டில் இத்தனை நாள் வாழ்ந்த ஜனனியும் கையெழுத்துப்போட வேண்டும் என சொல்கிறார். இதைக்கேட்டு நந்தினி, ரேணுகா, தர்ஷினி என அனைவரும் ஆத்திரப்படுகின்றனர். ஆனால், ஈஸ்வரி, ஜனனி நிச்சயம் வந்து கையெழுத்துப்போடுவார் என சொல்கிறார்.
சீறும் ஜனனி: இதையடுத்து, சக்திக்கு ஈஸ்வரி போன் செய்த ஜனனி அழைத்துக்கொண்டு வரும் படி சொல்ல ஜனனி வர மறுக்கிறார். அப்போது சக்தி, அண்ணி பல முறை கூப்பிட்டுவிட்டார்கள் இதற்கு மேலும், நாம் வீட்டுக்கு போகாமல் இருப்பது நல்லது இல்லை என சொல்கிறார். இதைக்கேட்டு ஜனனி, இல்ல சக்தி, என்ன ஆனாலும், அந்த குணசேகருக்கு தண்டனை வாங்கி கொடுக்காமல் நான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன். இதுக்கு மேல என்னால் எதையுமே விட்டு கொடுக்க முடியாது, இதுதான் என்னுடைய பைனல்அட்டாக் என சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications