மருமகள்களை அடக்கி வைங்கடா.. இல்லனா அவ்வளவு தான்.. மகன்களை ஏற்றிவிடும் விசாலாட்சி!
சென்னை: நேற்றைய எபிசோடில், குணசேகரன் கோவிலுக்கு வந்து இருக்க, ஈஸ்வரியின் அப்பா, குணசேகரனுக்கு போன் போட்டு, நான் ஈஸ்வரியிடம் பேசி விட்டேன். அவள் மணி விழாவிற்கு சம்மதம் சொல்லிவிட்டாள். அவள் மட்டுமில்லாமல், உங்கள் மகளும் இந்த மணி விழாவில் கலந்து கொள்வார்கள். இதனால நீங்க தைரியமா, அதற்கான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறார். இதனால் சந்தோஷம் அடைந்த ஆதி குணசேகரன், தம்பிகளிடம், ஈஸ்வரி மணி விழாவிற்கு ஒத்துக்கொண்டாள் என்று சொல்ல, அப்போது, கரிகாலன் எப்படியோ ஈஸ்வரி அக்காவை சம்மதிக்க வச்சிட்டீங்க, இனிமே நம்ம வீட்டுல விசேஷம் களைகட்ட போகுது என்று சொல்கிறான்.
அப்போது விசாலாட்சி, தனது மகன்களிடம் உங்களுடைய பொண்டாட்டிங்களை ராமேஸ்வரத்திற்கு போயிட்டு வர சொன்னோம். ஆனால், அவங்க யாரும் போக முடியாதபடி ஆயிடுச்சு. அதேபோல, கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு பண்ணோம், அதுவும் நடக்க முடியாம போயிடுச்சு. இதனால, இந்த மணி விழாவை நல்லா சிறப்பாக செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அப்போது ஞானம், அண்ணனோட இந்த மணி விழாவை ஊரே வியந்து பார்க்கிற அளவுக்கு நாம செஞ்சிடலாம் என்று சொல்கிறான். அப்போது, விசாலாட்சி அதைவிட முக்கியமான விஷயம் ஒன்னு இருக்குடா, இந்த வீட்ல இருக்குற மருமகள்கள் எல்லாம், இவன் மேல பழிபோட்டு வீட்டை விட்டு வெளியில போனவளுங்க, அவளுங்களே இந்த மணி விழாவை முன் நின்னு நடத்த வேண்டும். இப்படிப்பட்ட வீட்டை விட்டா மருமகள்கள் போனாங்க என்று, மருமகள்களை பத்தி இந்த ஊரே நினைக்கனும். அதுக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து, உங்களுடைய பொண்டாட்டிங்க கிட்ட இத பத்தி பேசணும். நீங்க அவளுங்கள அடக்கி வைக்கணும்னு நினைச்சீங்கன்னா, அவளுங்க அடக்க மாட்டாளுங்க, அவளுங்க இப்ப இந்த வீட்ல கட்டுப்பட்டு இருக்கிறதுக்கு ஒரே காரணம் உங்களுடைய அன்பு தான், அந்த அன்பை வைத்து அனைவரையும் நீங்க கைக்குள்ள போட்டுக்கிட்டு காரியத்தை சாதிக்க பாருங்கடா என்று விசாலாட்சி தன்னுடைய மகன்களை ஏற்றி விடுகிறார்.

மிரட்டிய குணசேகரன்: இதைத்தொடர்ந்து அனைவரும் வீட்டுக்கு கிளம்பி வர அப்போது, வெளியில் இருந்து வந்த சில பேர், ஜனனியை எங்க வீட்டு பக்கம் வரவிடாதீங்க, கஷ்டமோ நஷ்டமோ நாங்களே பார்த்துக்கொள்கிறோம். தயவு செய்து ஜனனியை மட்டும் எங்க வீட்டு பக்கம் வரவிடாதீங்க என்று காலில் விழுந்து செஞ்சுகிறார். மேலும், எங்களுக்கு வேற வழி தெரியவில்லை. எங்க வீட்டில் இருக்கும் பெண்கள் யாரும் அடங்காமல், கோர்ட்டுக்கு போவோம், போலீஸ் ஸ்டேஷனுக்கு போவோம் என்கிறார்கள். அதற்கு எல்லாம் காரணம் இந்த ஜனனி தான். இதுஎல்லாம் எங்களுக்கு தேவையா... உங்க மேல இருக்குற மரியாதை வெச்சித்தான் சொல்லிட்டு போகலாம் என்று வந்தோம் இல்லை என்றால், என்ன பண்ண வேண்டுமோ அதை செய்வோம் என்று அனைவர் முன்னும் மிரட்டிவிட்டு செல்கிறார். அப்போது, கதிர், என்ன ஜனனி இது எல்லாம் உனக்கு தேவையா, ஒழுங்க வீட்டுக்குள் அடங்கி இருக்க மாட்டியா என்று சொல்லி சத்தம் போடுகிறான்.
அப்போது, குணசேகரன், எல்லாம் ஒழுங்கா உள்ளே போங்க என்று சொல்லிவிட்டு, ஏம்மா ஜனனி, நமக்கு எதுக்கு இந்த ஊர் வம்பு, உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கவே முடியாதா... ஏதாவது ஒரு பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்கனுமா.. ஏன் இப்படி பண்றனு கேள்வி கேட்டால், நான் தான் அவங்களை தூண்டி விட்டு மிரட்ட சொன்னேன் என்று என் மேலயே பழி போடுவே. அந்த பழி பாவத்திற்கு எல்லாம் அஞ்சும் ஆள் நான் இல்ல, இவங்களை நான் பார்த்தது கூட இல்ல. ஆனால், என் மேல இருக்கும் மரியாதையால் தான் , இப்போ உன்னை விட்டு போய் இருக்கிறார்கள். இந்த மரியாதையாவது காப்பாத்திக்கோ, தேவை இல்லாமல் எல்லா விஷயத்திலும் மூக்கை விடாதே, அவங்களை பார்த்த முரட்டுத்தனமான ஆட்களாக இருக்கிறார்கள் பார்த்து இருந்துக்கோ என, குணசேகரன் மறைமுகமாக ஜனனிக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு செல்கிறான்.
இன்றைய ப்ரோமோ: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், நந்தினி தனது கணவரிடம், என்னது மணி விழாவிற்கு எங்கவீட்டில் இருந்து சீர் செய்ய வேண்டுமா... எங்க வீட்டை பத்தி உங்களுக்கு ஏதாவது கவலை இருக்கா. எங்க அம்மாவின் உடம்பு ரொம்ப மோசமான நிலையில் இருக்கு, அதை வெளியில் சொல்ல முடியாமல், எங்க அம்மா நடமாடிக்கொண்டு இருக்காங்க, மொத்தம்மா இளுத்துக்கிட்டு படுத்துவிட்டால், குடும்ப நிலைமை மோசமாகிவிடும் என்று நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவங்க உடம்பை பார்த்து கொள்வதற்கே பணம் இல்லாமல் நாங்க கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்த லட்சனத்தில் 15 லட்சம் ரூபாயை மணி விழாவிற்கு தரவேண்டுமா.. உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.... உங்க அம்மா தானே சொல்லி அனுப்பினாங்க.. 15 லட்சம் எல்லாம் தரமுடியாது. வேணும்னா 15 ஆயிரம் தருகிறேன்.

நாடகமாடும் கதிர்: இந்த வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விழாவிற்கும், எங்க வீட்டில் இருந்து சீர் சீராக செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். உங்க அண்ணா ஒரு நோட்டுல எழுதி வெச்சி இருப்பாரு, அதை வேணும்னா போய் பாருங்க, உங்க குடும்பத்திற்கு சீர் செய்தே இப்படி ஆகிவிட்டோம். இதுல மணி விழாவிற்கு வேற சீர் செய்ய வேண்டுமா என்று கோவத்தில் கத்திக்கொண்டு இருக்கிறாள். அப்போது, ஏன் இப்படி கோவப்படுற, யார் காதிலாவது விழாப்போகிறது. அமைதியா இரு நந்தினி, யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. உங்க அப்பா ஒன்னும், அவர் காசுல இதை செய்ய வேண்டாம், நான் பணம் தருகிறோன். அந்த பணத்துல அவர் செய்தால் போதும், அப்போது தான் இந்த ஊர் முன்னாடி எனக்கு பெருமையாக இருக்கும். அவர் உனக்கு மட்டும் அப்பா இல்ல நந்தினி, எனக்கும் அப்பா தான். நான் அவரை கஷ்டப்படுத்த மாட்டேன். அதே நேரத்தில் என் மரியாதையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். இந்த ஒரு முறையாவது நான் சொல்வதை கேளு நந்தினி, எனக்காக, உன் அப்பா கிட்ட நான் கொடுக்குற பணத்தை வெச்சி சீர் செய்ய சொல்லு அது போதும் என்று, அம்மா சொல்லி கொடுத்தது போல, அன்பாக இருப்பது போல நாடகமாடுகிறான்.


Click it and Unblock the Notifications











