சரிந்து விழுந்த குணசேகரன்.. ஜனனியை கையெடுத்து கும்பிட்ட ஈஸ்வரி.. எதிர்நீச்சலில் தொடர்கிறது!

சென்னை: சக்திக்கு ஈஸ்வரி ஃபோன் செய்த ஜனனி அழைத்துக்கொண்டு வரும் படி சொல்ல ஜனனி வர மறுக்கிறார். அப்போது சக்தி, அண்ணி பல முறை கூப்பிட்டுவிட்டார்கள் இதற்கு மேலும், நாம் வீட்டுக்கு போகாமல் இருப்பது நல்லது இல்லை என சொல்கிறார். இதைக்கேட்டு ஜனனி, இல்ல சக்தி, என்ன ஆனாலும், அந்த குணசேகருக்கு தண்டனை வாங்கி கொடுக்காமல் நான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன். இதுக்கு மேல என்னால் எதையுமே விட்டு கொடுக்க முடியாது, இதுதான் என்னுடைய பைனல்அட்டாக் என சொல்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், ஈஸ்வரி தர்ஷனி இடம் உன் கருத்தும் ஜனனி கருத்தும் ஒன்னுதானே, அது எந்த கருத்தாக இருந்தாலும் ஜனனியை இங்கே வந்து பேச சொல்லு, நீ போய் கூட்டிக்கிட்டுவா என சொல்ல, தர்ஷினி ஜனனியை பார்க்க செல்கிறார். ஜனனி தங்கி இருக்கும் இடத்திற்கு வரும் தர்ஷினி இதுக்கு மேல நீங்க இங்கே இருப்பது சரியா வராது சித்தி, வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் அம்மாவிடம் எடுத்து சொல்லுங்க என சொல்லி, அனைவரும் கிளம்பி குணசேகரன் வீட்டுக்கு வருகின்றனர்.

சரிந்துவிழுந்த குணசேகரன்: இதையடுத்து, ஜனனியை பார்த்த ஈஸ்வரி நீ ஏன் போனை எடுக்கல என கேட்கிறாள். அப்போது ஜனனி, என்ன விஷயம் அதை மட்டும் சொல்லுங்க, இந்த அட்வகேட் வர சொன்னது நாளதானே நீங்க என்னை வர சொன்னீங்க, அந்த புகார் மனுவில் என்ன இருக்கு, அந்த புகாரை கொடுத்தது யார், அந்த புகார் மனுவில் என்ன இருக்கு என்பதை எல்லாம் முன்னாடியும் படித்து காட்ட சொல்லுங்க நான் கையெழுத்து போடுகிறேன் என சொல்கிறாள். இதைக்கேட்டு குணசேகரன் கோவப்பட்டு கத்த இரண்டு பேருக்கு இடையே வாக்குவாதம் முற்றுகிறது. இந்த நேரத்தில் குணசேகரன் தடுமாறி சரிந்துவிழ அனைவரும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

ஜனனியை திட்டிய ஈஸ்வரி: இதைப்பார்த்த ஜனனி எல்லாம் நாடகம் என்று சொல்கிறாள். இதனால், கோவப்படும் ஈஸ்வரி, ஒருத்தர் உடம்பு முடியாம இருக்காரு அவரைப்பார்த்து நடிக்கிறாருனு சொல்ற, இதெல்லாம் சரியா ஜனனி, நீ ஏன் இப்படி மாறிட்ட, நீ உன் மனசுக்குள் என்ன நினைச்சிக்கிட்டு இருக்க என கேள்வி கேட்க, பதிலுக்கு ஜனனியும் பேச இரண்டு பேருக்கும் நடுவில் சண்டை வந்துவிடுகிறது. அப்போது ஈஸ்வரி நீயும் இந்த வீட்டு ஆளுங்க போல நடந்துக்குற இப்படி எல்லாம் பேசுனா, நாங்க வருத்தப்படுவோம் என்று கூட யோசிக்காத உன்கிட்ட இனி நாம் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி சமையல் அறைக்குள் சென்று விடுகிறாள்.

கையெடுத்து கும்பிட்டு ஈஸ்வரி: ஈஸ்வரி சொன்னதை தாக்கிக் கொள்ள முடியாத ஜனனி கதறி அழுக்கொண்டு இருக்க ரேணுகா சமாதானப்படுத்துகிறாள். அப்போது, ஜனனி, ஈஸ்வரி அக்கா சொன்னா நான் யார் காலில் வேண்டுமானாலும் விழுவேன். அவங்க என் அக்கா மட்டுமில்ல, அம்மா என்று சொல்கிறாள். இதைக்கேட்ட ஈஸ்வரி ஜனனியின் அருகில் வந்து கையெடுத்து கும்பிட்டு என்ன அம்மானு சொல்லாதே, தயவு செய்து அந்த கதையை நிறுத்து என சொல்கிறாள். இதையடுத்து இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X